சீனப் புத்தாண்டின் முதல் நாளான அடுத்த மாதம் ஒன்றாம் தேதியன்று ஃபேர்பிரைஸ் பேரங்காடி தனது 133 கடைகளைத் திறந்துவைத்திருக்கும். சீனப் புத்தாண்டுக்காக வாடிக்கையாளர்கள் தேவையான பொருள்களை வாங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஃபேர்பிரைஸின் 133 கடைகளில் 40 கடைகள் என்றும்போல் 24 மணி நேரத்திற்கு இயங்கும். 91 கடைகள் மாலை ஐந்து மணிக்கு மூடப்பட்டும்.
கோல்ட் ஸ்ரேடோரேஜின் அனைத்து 53 கடைகளும் சீனப் புத்தாண்டின் முதல் நாளன்று திறந்திருக்கும். சீனப் புத்தாண்டின் இரண்டு நாள்களிலும் தக்காஷிமாயா கடைத்தொகுதியில் உள்ள கிளையைத் தவிர இதன் எல்லாக் கடைகளும் திறந்திருக்கும்.
அனைத்து ஜயன்ட் பேரங்காடிக் கடைகளும் சீனப் புத்தாண்டுக்கு முதல் நாளன்றும் சீனப் புத்தாண்டு விடுமுறையில் முதல் மூன்று நாள்களிலும் திறந்திருக்கும்.
ஷெங் சியோங் பேரங்காடியின் அனைத்து கடைகளும் சீனப் புத்தாண்டின் முதல் நாளன்று மாலை நான்கு மணிக்கு மூடப்படும். சீனப் புத்தாண்டின் முதல் இரண்டு நாள்களுக்கு இதன் கடைகள் காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணிவரை திறந்திருக்கும்.
மேல் விவரங்களுக்கு இவற்றின் இணையத்தளங்களை நாடலாம்.

