திறனாளர்களை ஈர்க்கும் இடத்தில் சிங்கப்பூர்

திறனாளர்களை ஈர்க்கும் இடத்தில் சிங்கப்பூர்

1 mins read
1ca2ae8d-8623-45bb-86d8-3201e505e1c1
-

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது பர­வ­லாகி வரும் வேளை­யில் நல்ல வர்த்­த­கச் சூழ­லைக் கொண்­டி­ருப்­ப­து­டன் தர­மான வாழ்க்­கை­யை­யும் வழங்­கும் ஆற்­றல் சிங்­கப்­பூருக்கு உள்­ளது. அத­னால் உல­க­ள­வில் திற­மை­சா­லி­களை ஈர்ப்பதில் சிங்­கப்­பூ­ரின் கை ஓங்கியிருக்கிறது.

எனி­னும், தற்­போ­தைய நிலை­யின் கார­ண­மாக இது­வரை இல்­லாத வகை­யில் சிங்­கப்­பூ­ரால் திறமை­சா­லி­களை ஈர்க்­க­மு­டிந்­தா­லும் இது ஏற்­றத்­தாழ்­வை­யும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று 'சிங்­கப்­பூர் கண்ணோட்டம்' கலந்­து­ரை­யா­ட­லில் கலந்­து­கொண்­ட­வர்­கள் கூறி­னர். அத­னால்­ சில சமூக அம்­சங்­கள் மேம்­ப­டு­வ­தற்கு ஏற்­ற­வாறே பொரு­ளி­யல் சாத­னை­கள் இடம்­பெ­ற­வேண்­டும் என்று அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

ஹார்­வர்ட் பல்­க­லைக்­க­ழக பொரு­ளி­யல் நிபு­ணர் எட்­வர்ட் கிலே­சர், சிங்கப்­பூர் வர்த்­தக தொழில் அமைச்­சின் நிரந்­த­ரச் செய­லா­ளர் கேப்­ரி­யல் லிம் உள்ளிட்­டோர் கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர். கொவிட்-19 கொள்ளை­நோய்ப் பர­வ­லால் மக்­க­ளின் வாழ்க்கைமுறை­யும் வேலை செய்­யும் வித­மும் மாறி­னா­லும் சிலர் எதிர்­பார்ப்­ப­து­போல் அலு­வ­ல­கங்­கள் முற்­றி­லும் தேவைப்­ப­டா­மல் போகாது என்­றும் கலந்­து­ரை­யாடலில் குறிப்­பி­டப்­பட்­டது.