சிறைப் பள்ளியால் மீண்டும் மலர்ந்த கல்வி வாய்ப்பு

சிறைப் பள்ளியால் மீண்டும் மலர்ந்த கல்வி வாய்ப்பு

1 mins read
52d2c344-7f20-4b87-8577-d1f8a1590a49
-

சிறைத் தண்டனை அனுபவித்து வரும்போதிலும் கடந்த ஆண்டின் 'ஓ' நிலை தேர்வை 58 பேர் எழுதினர். அவர்களில் 56 பேர் குறைந்தது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்று உயர்நிலைக்குப் பிந்திய கல்விக்குத் தகுதி பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சின் துணை அமைச்சர் ஃபைசால் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார். தேர்வு எழுதிய கைதி ஒருவர் இரு பாடங்களில் 'ஏ1' சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.

தானா மேரா சிறைப் பள்ளிக்கு துணை அமைச்சர் நேற்று நேரில் சென்று தேர்வு எழுதியவர்களில் சிலரைச் சந்தித்துப் பேசினார். சிறைப் பள்ளியில் வாரத்துக்கு ஐந்து நாள்கள் காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கைதிகளின் தண்டனைக்காலம் முடிவதற்குள் பாடத்திட்டத்தை முடிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

சிறைப் பள்ளியில் படித்து 'ஓ' நிலை தேர்வு எழுதிய இருவரிடம் பேசிய துணை அமைச்சர் ஃபைசால் இப்ராஹிம் (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்