டிசம்பரில் எஸ்ஐஏ, ஸ்கூட்டில் 600,0000 பேர் பயணம்

டிசம்பரில் எஸ்ஐஏ, ஸ்கூட்டில் 600,0000 பேர் பயணம்

1 mins read
b9eef995-bfd1-4b91-82d9-0f8b77c8e3e8
-

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ), ஸ்கூட் விமா­னங்­களில் கடந்த டிசம்­பர் மாதம் கிட்­டத்­தட்ட 600,000 பேர் பய­ணம் செய்­த­னர்.

கடந்த நவம்­ப­ரில் பதி­வா­கி­

யி­ருந்த பய­ணி­கள் எண்­ணிக்­கை­யை­விட இது கிட்­டத்­தட்ட இரு மடங்­கா­கும்.

2020ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் பதி­வா­கி­யி­ருந்த எண்­ணிக்­கை­யை­விட இது ஏழு மடங்­கா­கும்.

எஸ்­ஐஏ குழு­மம் நேற்று வெளி­யிட்ட தக­வ­லில் இது தெரி­ய­வந்­துள்­ளது.

என்­றா­லும், விமா­னப் பயண மீட்சி விகி­தம் எதிர்­வ­ரும் மாதங்­களில் மெது­வ­டை­யக்­கூ­டும் என்று நிபு­ணர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர். ஓமிக்­ரான் பர­வ­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதை­யில் (விடி­எல்)

பய­ணி­கள் வரம்பு குறைக்­கப்­பட்­ட­தும் அதற்­குக் கார­ணம்.

'விடி­எல்' திட்­டம் தொடர்ந்து விரி­வாக்­கம் கண்டு வந்­த­தும் ஆண்­டி­றுதி பய­ணப் பரு­வ­மும் ஒரு­சேர வந்­த­தால் டிசம்­ப­ரில்

பய­ணி­க­ளி­டையே தேவை கணி­ச­மாக அதி­க­ரித்­த­தாக எஸ்­ஐஏ குழு­மம் கூறி­யது.

கடந்த டிசம்­பர் மாதம் பேங்­காக் உட்­பட எட்டு நகரங்கள், எஸ்­ஐஏ குழு­மத்­தின் 'விடி­எல்' கட்­ட­மைப்­பில் சேர்ந்­ததை அக்­

கு­ழு­மம் சுட்­டி­யது.

'விடி­எல்' அல்­லாத நாடு­

க­ளுக்கு வழங்­கப்­படும் விமா­னச் சேவை­க­ளை­யும் சேர்த்து, கடந்த டிசம்­பர் மாத இறுதி நில­வ­ரப்­படி, எஸ்­ஐஏ குழு­மம் 85 இடங்­

க­ளுக்கு விமா­னச் சேவை­களை வழங்­கி­யது.