எல்லை இல்லாத பக்தி

எல்லை இல்லாத பக்தி

2 mins read
f0b0ee9c-0c1d-452b-9d90-1dec4df01a64
மனைவி கொரின் ஆங்குடன் ரோய் கான் கான் டூம்,54, -

சிங்கப்பூரில் இவ்வாண்டு கொவிட்-19 கட்டுப்பாடுகளால் காவடிகள் இல்லை என்றாலும் முருகனுக்கு பால் குடம் செலுத்த பல இனத்தவரும் கோயிலுக்கு வந்திருந்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பால்காவடியும் பால்குடமும் எடுத்துவந்த ரோய் கான் கான் டூம்,54, முதன்முறையாக தம் மனைவி கொரின் ஆங்குடன், 58, வந்திருந்தார். தமது 85 வயது தாயாருக்காக வேண்டுவதாகக் கூறிய திரு கான், தொடர்ச்சியான வேண்டுதலால் தமது குடும்பம் நலமுடன் இருப்பதாக நம்புகிறார்

நான்கு வயது முதல் பால்குடம் எடுத்து வருவதாகக் கூறிய பவானி சூர்யா, 35, வேண்டுதல் இன்றி இவ்வாண்டு இதனைச் செய்ததாகக் கூறினார். "காலையில் வந்தபோது ஏற்பாடுகள் மிகவும் சுமுகமாக இருந்தன. திருப்திகரமாக வேண்டிக்கொண்டேன்" என்று அவர் கூறினார்.

-

கொவிட்-19க்கு முந்திய ஆண்டு காவடி எடுத்துவந்த வெங்கடேஷ்,23, இம்முறை பால்குடம் மட்டும் எடுத்தார். ஆயினும் தமக்கு மன நிறைவு முழுமையாக ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

பதின்ம வயதில் பால்குடம் செலுத்த ஆரம்பித்த கப்பல்துறை பணியாளர் குர்மித் சிங்,41, கொவிட்-19க்குப் பிந்திய இயல்நிலையின் ஓர் அங்கமாக இன்றைய திருவிழாவைக் கருதுவதாகக் கூறினார். "கிருமிப்பரவல் அடுத்தாண்டு இதே போல நீடித்தாலும் கட்டுப்பாடுகளுடன் தொடர்வேன் என நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.

முதன்முறையாக பால்குடம் செலுத்திய நோயாளி பராமரிப்பு பணியாளர் சப்ரினா,29, இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் உலக மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுவதாகக் கூறினார்.

-

கடந்தாண்டு பால்குடம் எடுக்க முடிந்த நந்தினி மணியம், 48, இம்முறை அதற்கான ரசீதைப் பெறத் தவறினார். எனவே. தமது ஒன்பது வயது மகனுடன் பால் ஊற்ற வந்திருந்தார். "ரசீது கிடைக்காதபோதும் பால் ஊற்ற எனக்குக் கிடைத்த வாய்ப்பின்மூலம் வேண்டுதலை நிறைவேற்றினேன்:" என்று அவர் கூறினார்.

-

வேண்டுதலுக்காக தலைமுடியை மொட்டையடித்த இல்லத்தரசி 58 வயது அமுதவள்ளி தங்கராஜ், 11 வயது முதல் செய்து வந்ததாகக் குறிப்பிட்டார். குடும்ப நலனுக்காக இதனை செய்த்தாகக் குறிப்பிட்ட அவர், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டதால் கூடுதல் பாதுகாப்பை உணர்வதாகக் கூறினார்.