இணைய நலன் பாடங்கள்

உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளுக்­கான புதிய கல்­வித் திட்­டத்­தின்­கீழ் இணை­யத்­தில் தங்­க­ளின் நல­னைக் காத்­துக்­கொள்­ளக் கற்­பிக்­கும் பாடங்­கள் யதார்த்­தத்தை மைய­மா­கக் கொண்­டி­ருக்­கும். இணை­யத்­தில் இடம்­பெ­றும் தகாத, மன­தைப் புண்­ப­டுத்­தக்­கூ­டிய அம்­சங்­களை அடை­யா­ளம் காண இந்­தப் பாடங்­கள் மாண­வர்­க­ளுக்­குக் கைகொ­டுக்­கும் என்று கல்­விக்­கான துணை அமைச்­சர் சுன் சூலிங் தெரி­வித்­தார். இணை­யத் துன்­பு­றுத்­தல், இணைய விளை­யாட்­டு­க­ளுக்கு அடி­மை­யா­வது, பொய்த் தக­வல்­கள், மோசடி போன்ற பல அபா­யங்­களை மாண­வர்­கள் இணை­யத்­தில் எதிர்­நோக்­கு­வ­தாக திரு­வாட்டி சுன் குறிப்­பிட்­டார். காம்­பஸ்­வேல் உயர்­நி­லைப் பள்­ளிக்­குச் சென்­ற­போது அவர் பேசி­னார்.

"இந்தப் பாடங்­க­ளின் வாயி­லாக அன்­றாட வாழ்க்­கை­யில் இடம்­பெறும் நிகழ்­வு­களை உதா­ர­ண­மாக வைத்து சம்­ப­வங்­களை நிரூ­பிக்­கும் காணொ­ளி­கள், படங்­கள் (ஸ்கி­ரீன்­ஷாட்ஸ்) ஆகி­ய­வற்­றைக் கொண்டு இணை­யத்­தில் எத்­த­கைய அபா­யங்­களை எதிர்­கொள்­ளக்­கூ­டும் என்­பதை நமது ஆசி­ரி­யர்­கள் மாணவர்­க­ளுக்­குப் புரிய வைப்­பர்," என்று சமுதாய குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சருமான அவர் செய்தியாளர்களிடம் கூறி­னார்.

மாண­வர்­கள் தங்­க­ளின் உணர்­வு­க­ளைக் கவ­னித்­துக்­கொள்­ள­வேண்­டும் என்­ப­தை­யும் சுட்­டிக்­காட்டிய திரு­வாட்டி சுன், அதைக் கையாள ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் ஆத­ரவு தரும் கலா­சா­ரம் பள்­ளி­களில் உள்­ளது என்­றும் அதன் மூலம் பேசிக்­கொள்­ள­லாம் என்­றும் குறிப்­பிட்­டார். இவ்­வாண்டு தொடக்­கத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூர் முழு­வ­தும் உயர்­நிலை மூன்­றைத் தாண்­டிய மாண­வர்­க­ளுக்கு 'சிசிஇ' எனப்­படும் நற்­கு­ண­மும் குடி­யி­ய­லும் கல்­வி­யும் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதன்­கீழ் இணைய நலன் தொடர்­பி­லான அம்­சங்­கள் கையா­ளப்­ப­டு­கின்­றன. 2020ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் அறி­விக்­கப்­பட்ட இத்­திட்­டம், இணைய நலன் விவ­கா­ரங்­கள் குறித்து மாண­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாட கூடு­தல் நேரத்தை வழங்­கு­கிறது. இதற்­கான நேரம் சுமார் 50 விழுக்­காடு அதி­க­ரிக்­கிறது. 2016ஆம் ஆண்­டி­லி­ருந்து நடத்­தப்­பட்ட மறு­ப­ரி­சீ­லனை நட­வ­டிக்­கை­களுக்­குப் பிறகு மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட 'சிசிஇ' திட்­டம் வரை­யப்­பட்­ட­தாக அப்­போது கல்வி அமைச்­ச­ராக இருந்த ஓங் யி காங் தெரி­வித்­தார்.

சென்ற ஆண்டு இத்­திட்­டம் முத­லில் உயர்­நிலை ஒன்று, இரண்டு மாண­வர்­க­ளுக்கு நடை­மு­றைப்­படுத்­தப்­பட்­டது. இவ்­வாண்டு உயர்­நிலை மூன்­றைத் தாண்­டிய மாண­வர்­களுக்­கும் நீட்­டிக்­கப்­பட்­டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!