இன்ஸ்டகிராம் வலைத் தளத்தில் ஆக அதிகம் குறிப்பிடக்கூடிய இடமாக சிங்கப்பூர் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. சுற்றுப்பயண சஞ்சிகையான 'பிக் 7 டிராவல்' சிங்கப்பூருக்கு இந்தப் பெருமையை வழங்கியுள்ளது.
ஆண்டுதோறும் 'ஹேஷ்டேக்' குறிப்புகள் தொடர்பில் 'பிக் 7 டிராவல்' கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இவ்வாண்டின் கட்டுரையில் சிங்கப்பூரில் படங்களை எடுத்துத் தள்ள பல வாய்ப்புகள் உள்ளதாக அது குறிப்பிட்டது. கரையோரப் பூங்காவில் உள்ள 'சூப்பர்ட்ரீ குரோவ்' முதல் ஹாஜி லேனில் உள்ள வண்ணமயமான சாலை ஓவியங்கள் வரை நிழற்பட ஆர்வலர்களை ஈர்க்கும் என்று அது சுட்டியது.
ஒவ்வோர் இடத்துக்கும் பயன்படுத்தப்பட்ட 'ஹேஷ்டேக்' குறிப்புகளைக் கொண்டு வெற்றிபெறும் இடம் நிர்ணயிக்கப்பட்டது.

