2.2 மில்லியன் முகக் கவசங்கள் விநியோகம்

2.2 மில்லியன் முகக் கவசங்கள் விநியோகம்

1 mins read
19b1beca-1b80-4b39-8290-a17a427d77d8
-

துமா­செக் அற­நி­று­வ­னம் இல­வ­ச­மாக வழங்­கி­ வ­ரும் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடிய முகக் கவ­சங்­களை நேற்று மதிய நில­வரப்­படி சுமார் 2.2 மில்­லி­யன் குடி­யி­ருப்­பா­ளர்­கள் பெற்­றுக்­கொண்­டுள்­ள­னர். குடி­யி­ருப்­பா­ளர்­கள் முகக் கவ­சங்­களை விநி­யோ­கிக்­கும் இயந்­தி­ரங்­க­ளி­லி­ருந்து அவற்­றைப் பெற்­றுக்­கொண்­ட­னர்.

முகக் கவ­சங்­க­ளைப் பெற்­றுக்­கொள்ள கிட்­டத்­தட்ட 14,000 பேர் முன்­கூட்­டியே விண்­ணப்­பித்­த­தா­க­வும் துமா­செக் தெரி­வித்­தது.

ஆறா­வது முறை­யாக முகக் கவ­சங்­கள் இல­வ­ச­மாக வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. தற்­போ­தைய விநி­யோக நட­வ­டிக்கை, சென்ற வாரம் திங்­கட்­கி­ழ­மை­யன்று தொடங்கி­யது.

முகக் கவ­சங்­களை விநி­யோகிக்­கும் இயந்­தி­ரங்­கள் அனைத்து சமூக மன்­றங்கள், 20 பேருந்து முனை­யங்­கள், பிளாசா சிங்­கப்­பூரா கடைத்­தொ­குதி உள்­ளிட்ட இடங்­களில் இருக்கின்றன. தங்­க­ளின் அடை­யாள அட்­டை­யைப் பயன்­படுத்தி சிங்­கப்­பூர் குடி­மக்­கள் இயந்­தி­ரங்­க­ளி­லி­ருந்து முகக் கவ­சங்­களைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். தீவு முழு­வதும் சுமார் 1,000 முகக் கவச இயந்­தி­ரங்­கள் உள்­ளன.

சில இயந்­தி­ரங்­களில் கோளாறு இருப்­ப­தா­கத் தங்­களுக்குத் தகவல் வந்ததென துமா­செக்­கின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

பெரும்­பாலான வேளை­களில் இயந்­தி­ரங்­களில் கோளாறு ஏதும் இருந்­தி­ருக்­காது, முகக் கவ­சம் தவ­றான இடத்­தில் விழுந்­தி­ருக்­கும் என்று துமா­செக் சுட்­டி­யது. இயந்­தி­ரத்­தில் முகக் கவ­சம் விழ­வேண்­டிய பகுதி­யின் மூடியை அகற்­றிக் கவ­ன­மாகப் பார்க்­கு­மாறு அது குடி­யி­ருப்­பா­ளர்­களைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

ஓர் இயந்­தி­ரத்­தில் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வோர் வேறு இயந்­தி­ரத்­திற்­குச் செல்­ல­லாம் அல்­லது மறு­நாள் மீண்­டும் முயற்சி செய்­து­பார்க்­க­லாம் என்று துமா­செக் குறிப்­பிட்­டது.