மருத்துவ விடுப்பை மறுத்தவருக்குச் சிறை

மருத்துவ விடுப்பை மறுத்தவருக்குச் சிறை

1 mins read
856e3365-664b-40ea-97ee-5fc4cd6a1e28
-

பூச்சி ஒழிப்­புப் பணி­யா­ளர் ஒரு­வருக்கு மூன்று வாரங்­க­ளாக இரு­மல் இருந்­தது. கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­பட்ட அவர், வீட்­டில் இருக்­கு­மா­றும் கொவிட்-19 பரி­சோ­த­னையை மேற்­கொள்­ளு­மாறும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டார்.

ஆனால், 59 வயது ஆ ரஹிம் எம். தாஹா­விற்­குத் தனது நிறு­வனம் மாதந்­தோ­றும் கூடு­த­லாக வழங்­கும் 100 வெள்­ளியை விட்டுக்­கொ­டுக்­கும் எண்­ணம் இல்லை. அத­னால் தொடர்ந்து வேலை செய்­தார். மேலும், பல இடங்­க­ளுக்­குச் சென்­ற­து­டன் சக ஊழி­யர்­க­ளு­டன் மதிய உண­வ­ருந்­தி­னார்.

கொவிட்-19 விதி­மு­றையை மீறி­ய­தன் தொடர்­பில் சுமத்­தப்­பட்ட ஒரு குற்­றச்­சாட்டை சிங்­கப்­பூ­ர­ரான ரஹிம் ஒப்­புக்­கொண்­டார். அவ­ருக்கு ஐந்து வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

'வெர்­மி­னேட்­டர்' நிறு­வ­னத்­தில் ரஹிம் பூச்சி ஒழிப்­புப் பணி­யாளராக வேலை செய்­த­ார் என நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்பட்டது. அந்­நி­று­வ­னத்­தில் அவர் ஒரு குழு­வின் மேற்­பார்­வை­யா­ள­ராக இருந்­தார்.

ஆண்­டு­தோ­றும் ரஹி­மிற்கு வழங்­கப்­பட்ட சம்­ப­ளம் சுமார் 1,500 வெள்ளி. வேலைக்கு நேரத்­து­டன் செல்­வது, மருத்­துவ விடுப்பு எடுக்­கா­மல் இருப்­பது உள்­ளிட்­ட­வற்­றைக் கடைப்­பி­டிக்­கும்­போது அவ­ருக்கு மாதந்­தோ­றும் அனு­கூ­ல­மாக கூடு­த­லாக 100 வெள்ளி வழங்­கப்­பட்­டது.

மூன்று வாரங்­க­ளாக இரு­மல் இருந்­த­தால் 2020ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் ஐந்­தாம் தேதி­யன்று அவர் ஈஷூன் பொது மருந்­த­கத்­திற்­குச் சென்­றார்.

முத­லில் கொவிட்-19 பரி­சோ­த­னையை மேற்­கொள்ள ஒப்­புக்­கொண்­டார். ஆனால் முடி­வு­கள் வெளி­வ­ரும் வரை மருத்­துவ விடுப்­பில் இருக்­க­வேண்­டும் என்­பது தெரிந்­த­வு­டன் அவர் பரி­சோ­த­னையை மேற்­கொள்ள மறுத்­தார்.