வினையாகக்கூடிய விளையாட்டுகள் வழி பயிற்சி

வினையாகக்கூடிய விளையாட்டுகள் வழி பயிற்சி

2 mins read
0a3147ff-3867-46c0-a412-2810c1fd01fa
புதிய பாவனைப் பயிற்சி வளாகத்தில் விளையாட்டு ஒன்றில் ஒரு கை பார்க்கும் சுகாதார, மனிதவள மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் (நடு). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சவால்­மிக்க மருத்­து­வச் சூழல்­களை எவ்­வாறு கையாள்­வது என்­ப­தைச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் அறிந்­திட, சிங்­ஹெல்த் மற்­றும் டியூக்-என்­யு­எஸ் இணைந்து பாவ­னைப் பயிற்சி வளா­கம் ஒன்றை அமைத்­துள்­ளன. விளை­யாட்­டு­கள் வழி ஊழி­யர்­க­ளின் திறன்­களை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் இந்த வளா­கம் செயல்­படும்.

புதிய வளா­கம் காலேஜ் ரோட்­டில் அமைந்­துள்ள 'அக­டே­மியா'வில் நேற்று திறக்­கப்­பட்­டது.

நடை­மு­றைக்கு அப்­பாற்­பட்ட தீர்­வு­கள், உண்மை மற்­றும் மெய்­நி­கர் உல­கங்­களை ஒருங்­கி­ணைக்­கக்­கூ­டிய தொழில்­நுட்­பங்­கள், கற்­றலை மேம்­ப­டுத்­தும் விளை­யாட்­டுச் சாத­னங்­கள் ஆகி­ய­வற்றை வளா­கம் கொண்­டுள்­ளது.

"சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பயிற்சி­யின்­போது விளை­யாட்­டு­க­ளைச் சேர்ப்­ப­தன் மூலம் கற்­ப­வர்­க­ளுக்­குச் சவால்­மிக்க சூழல்­களை ஏற்­படுத்­தித் தர முடி­யும். அவர்­க­ளால் இதன்­வழி பாது­காப்­பான கற்­றல் சூழல் ஒன்­றில் தங்­க­ளின் நுண் சிந்­த­னைத் திறனை வளர்ப்­ப­து­டன் முடி­வெ­டுக்­க­வும் நடை­மு­றைத் திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்­வது பற்­றி­யும் அறி­வர்," என்று சிங்­ஹெல்த் குழு தலைமை கல்வி அதி­காரி பேரா­சி­ரி­யர் சான் சூங் மெங் கூறி­னார்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் பாவ­னைப் பயிற்­சி­யின் ஆற்­றலை மெரு­கூட்­டும் வகை­யில் சேர்க்­கப்­பட்ட இந்த விளை­யாட்­டு­அம்­சங்­கள் உள்­ள­தென சுகா­தார மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

இத­னால், இரு­வ­ழித்­தொ­டர்பு கற்­றல் வாய்ப்­பு­கள் ஏற்­பட்டு அவற்­றின் மூலம் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யி­ன­ரால் தங்­க­ளின் கற்­ற­லில் கூடு­தல் பொறுப்­பேற்­றுக் கொள்ள முடி­யும் என்­றார் அவர்.

வெவ்­வேறு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­க­ளுக்­கேற்ற திறன்­க­ளை­யும் தக­வல்­க­ளை­யும் அடிப்­ப­டை­யா­கக் கொண்டு 18 விளை­யாட்­டு­களை இப்­பு­திய 'சிம்ஸ் ஹப்' வளா­கம் உரு­வாக்கி உள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யி­ன­ரின் பயிற்­சித் தேவை­களை முழு­மை­பெ­றச் செய்ய இந்த விளை­யாட்­டு­கள் உத­வு­வ­தாக சிங்­ஹெல்த் டியூக்-என்­யு­எஸ் கழ­கத்­தின் இணை இயக்­கு­ந­ரான பேரா­சி­ரி­யர் ஃபாத்திமா லத்­தீஃப் கூறி­னார்.

தற்­போது கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­மனை, செங்­காங் பொது மருத்­து­வ­மனை, சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை, சாங்கி பொது மருத்­து­வ­மனை ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யி­ன­ருக்­காக புதிய வளா­கம் செயல்­ப­டு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

மனி­த­வ­ளத்­தை­யும் செல­வு­களை­யும் கிட்­டத்­தட்ட 25% குறைக்­க­வல்­ல­தாக இந்த விளை­யாட்­டு­கள் அமைந்­துள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது.