டெங்கியை குணப்படுத்தும் மருந்து சாத்தியமாகலாம்

டெங்கியை குணப்படுத்தும் மருந்து சாத்தியமாகலாம்

1 mins read
5165aba8-967b-451a-b07d-d7a9a99a2cd9
-

டெங்­கி­யால் பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்­குச் சிகிச்சை அளிக்­கும் நோக்­கில், ஆய்­வா­ளர்­கள் முதன்­மு­றை­யாக ஒரு மருந்தை, சோத­னைக் கட்­டத்­தில் ஆராய்ந்து வரு­கின்­ற­னர்.

இச்­சோ­த­னைக் கட்­டத்தை வெற்றி­க­ர­மா­கக் கடந்­து­விட்­டால் டெங்­கிக்கு ஒரு முடி­வு­கட்­ட­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

சிங்­ஹெல்த் மருத்­துவ ஆராய்ச்­சிப் பிரிவு இம்­முன்­னோட்­டத் திட்­டத்­தைச் சோதித்து வரு­கிறது. தற்­போது டெங்­கி­யைக் குணப்­படுத்­தும் மருந்து ஏதும் இல்லை என்று இதன் துணை மருத்­துவ, அறி­வியல் இயக்­கு­நர் பேரா­சி­ரி­யர் ஜென்னி லோ கூறி­னார்.

நோயா­ளி­க­ளுக்கு ஆத­ரவு அளிப்­பது, டெங்கி அறி­கு­றி­க­ளான காய்ச்­சல் மற்­றம் வலி­யைப் போக்­கு­வ­தில்­தான் தற்­போது சிகிச்சை முறை கவ­னம் செலுத்­து­கிறது.

டெங்கி கிரு­மி­யில் உள்ள இரு­வகை புர­தங்­கள் கலப்­ப­தைப் புதிய ஆய்வு மருந்து தடுக்­கிறது.

கிருமி இக்­கு­றிப்­பிட்ட இரு புர­தங்­க­ளா­லும் இனப்­பெ­ருக்­கம் செய்­வ­தாக பேரா­சி­ரி­யர் லோ குறிப்­பிட்­டார்.

"தொற்­றால் பாதிக்­கப்­பட்ட கொசு மூலம் நம் ரத்­தத்­தில் டெங்கி ஊடு­ரு­வும்­போது, நமது நோய் எதிர்ப்பு உயி­ர­ணுக்­களை அது தாக்­கு­வ­து­டன் இனப்­பெ­ருக்­க­மும் செய்­யும். அதைத் தடுக்­க­வும் மேலும் பல உயி­ர­ணுக்­கள் தாக்­கப்­ப­டா­மல் இருக்­க­வும், வெவ்­வேறு உடல் உறுப்பு­க­ளுக்­குச் சேதம் ஏற்­பட்­டுக் கடு­மை­யான டெங்கி தொற்று சிக்­கல் ஏற்­ப­டா­மல் இருக்­க­வும் இப்­புதிய மருந்து உத­வும் என்று நம்பு­கி­றேன்," என்­றார் அவர்.

டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்ட ஆரம்­பக்­கட்­டத்­தில் திரவ வடி­வில் ஐந்து நாள்­க­ளுக்கு மருந்து தரப்­படும்.