பார்க்வே ஈஸ்ட் மருத்துவமனையில் நிர்வாகியாகப் பணிபுரிந்த இங் சூ மெங், 53, பலமுறை மருத்துவமனையின் சேவை வழங்குநர்களில் ஒன்றான 'ஏடிஏ பில்டர்ஸ்' கட்டுமான, புதுப்பிப்பு நிறுவனத்திடம் தன் சொந்த பலனுக்காக உதவி கோரினார். மருத்துவமனையுடன் வர்த்தக ரீதியான உறவை வளர்த்துக் கொள்ள தன் கோரிக்கைகளுக்கு கட்டுமான நிறுவனம் அடிபணியும் என்று இங் எதிர்பார்த்தார். 'கேடிவி' கூடங்களுக்குக் குறைந்தது எட்டு முறை சென்றது, அங்கு வேலை பார்க்கும் பெண் ஊழியர்களால் உபசரிக்கப்பட்டது ஆகியவற்றுக்கு ஆன $4,750 செலவை 'ஏடிஏ பில்டர்ஸ்' ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டது. தன் மீது கூறப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை நேற்று இங் ஒப்புக்கொண்டதை அடுத்து, இங்குக்கு $29,000 அபராதம் விதிக்கப்பட்டது. தன் வீட்டில் உள்ள விளக்குகளை மாற்றுவதுடன் சாயமும் பூசித் தருமாறு இலவசச் சேவையை இங் நாடியதாக அறியப்படுகிறது.
மோசடி: முன்னாள் மருத்துவமனை நிர்வாகிக்கு அபராதம்
1 mins read
-

