தனிநபர் தகவல் பாதுகாப்பு மீறல்: லாப நோக்கற்ற குழுவுக்கு $14,000 அபராதம்

தனிநபர் தகவல் பாதுகாப்பு மீறல்: லாப நோக்கற்ற குழுவுக்கு $14,000 அபராதம்

1 mins read
72302529-93ec-4a5a-8620-1ddb319ee221
-

தனி­ந­பர் தக­வல் பாது­காப்பு சட்­டத்­தின்­கீழ் உறுப்­பி­னர்­க­ளின் தனி­ந­பர் தர­வு­க­ளைப் பாது­காக்­கத் தவ­றி­ய­தற்­கா­க­வும் வேறு சில விதி­மீ­றல்­க­ளுக்­கா­க­வும் 'நேச்­சர் சொசைட்டி' எனும் இயற்கை ஆர்­வ­லர் குழு­வுக்கு $14,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

தர­வுத் தனி­யு­ரி­மைச் சட்­டங்­களுக்கு உட்­ப­டு­வ­தற்­குத் தேவை­யான எழுத்­து­பூர்வ கொள்­கை­கள் குழு­வி­டம் இல்லை என்­றும் தர­வுப் பாது­காப்பு அதி­காரி ஒரு­வரை குழு நிய­மிக்­க­வில்லை என்­றும் தனி­ந­பர் தக­வல் பாது­காப்பு ஆணை­யம் கடந்த வாரம் தெரி­வித்­தி­ருந்­தது.

'நேச்­சர் சொசைட்டி' இணை­யத்­த­ளத்­தில் உறுப்­பி­னர், பய­னாளர் கணக்­கு­களை வைத்­தி­ருந்த 5,131 உறுப்­பி­னர்­கள் மற்­றும் உறுப்­பி­னர் அல்­லா­த­வர்­க­ளின் விவ­ரங்­கள், 2020ஆம் ஆண்டு நவம்­பர் 6ஆம் தேதி­யன்று கண்­ட­றி­யப்­பட்ட சம்­ப­வம் ஒன்­றில் பாதிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வந்­தது.

ஊடு­ரு­வப்­பட்ட தர­வுத்­த­ளங்­களைப் பதி­வி­றக்­கம் செய்­ய­லாம் என்று பல ஊடு­ருவி இணை­யத்­தளங்­களில் அறிக்கை ஒன்று வெளி­யி­டப்­பட்­ட­தில், பாதிக்­கப்­பட்ட அமைப்­பு­களில் இந்த இயற்கை ஆர்­வ­லர் குழு­வின் பெய­ரும் இடம்­பெற்­றி­ருந்­தது.

பெயர், கட­வுச்­சொல், மின்­னஞ்­சல் முக­வரி, தொடர்பு எண், பிறந்த தேதி போன்ற தக­வல்­களை ஊடு­ரு­வப்­பட்ட தர­வுத்­த­ளங்­கள் கொண்­டி­ருந்­தன. தர­வுப் பாது­காப்­புக் கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­தத் தவ­றி­ய­தா­கக் குழு ஒப்­புக்­கொண்­டது.