வங்கி மோசடியில் $495,000 இழந்த வாடிக்கையாளர்கள்

வங்கி மோசடியில் $495,000 இழந்த வாடிக்கையாளர்கள்

2 mins read
681cd7de-4e36-4a83-9eed-26711d91a9a6
படம்: சிங்கப்பூர் காவல் துறை -

கூகல் இணையப்பக்கத்தில் வெளிவரும் போலி வங்கி விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என சிங்கப்பூர் காவல் துறை கூறியுள்ளது.

அந்த மோசடியில் ஒரே மாதம் கிட்டத்தட்ட $495,00 இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 15 பேர் பாதிக்கப்பட்டனர்.

கூகல் தேடல் தளத்தைப் பயன்படுத்தி வங்கிகளின் தொடர்பு எண்களைத் தேடும்போது, மோசடி விளம்பரங்கள் தோன்றியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் விளக்கினர்.

அந்தப் போலி எண்னைத் தொடர்புகொண்டபோது, வங்கி அதிகாரி போல் ஒருவர் தங்களுடன் பேசியதாக அவர்கள் கூறிப்பிட்டனர்.

வங்கிக் கணக்கு, கடன் அட்டை, அல்லது கடன் பிரச்சினை உள்ளதாக மோசடிக்காரர் கூறுவார்.

தாங்கள் கொடுக்கும் வங்கிக் கணக்குக்கு தற்காலிகமாக பணம் மாற்றிவிட்டால், பிரச்சினையை சரிசெய்யலாம் என மோசடிக்காரர்கள் ஆலோசனை வழங்குவர்.

பணம் மாற்றிவிடப்பட்டதும், சிலருக்கு வங்கியிலிருந்து போலி குறுந்தகவல் கிடைத்தது.

"மோசடிகளை எதிர்போம்" (Let's Fight Scam) இயக்கத்தின் ஓர் அம்சமாக வங்கிக் கணக்குகள் புதுப்பிக்கப்படும் என்று அந்தக் குறுந்தகவல் செய்தி இருந்தது.

அதிக அளவில் பணம் மாற்றப்பட்டு வாடிக்கையாளர்கள் தங்கள் புதிய கணக்கு விவரம் குறித்து கேட்கும் போதோ அல்லது வங்கி தங்களை தொடர்பு கொள்ளும் போதோ அவர்கள் ஏமாற்றபட்டதாக உணர்வர்.

வங்கியின் அதிகாரபூர்வ தளங்களில் வங்கியின் தொடர்பு எண்களை உறுதிசெய்து கொள்ளுமாறு காவல் துறை ஆலோசனை வழங்கியள்ளது.

மோசடி என்று சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக வங்கியைத் தொடர்புகொள்ளுமாறு கூறப்பட்டது.