சிங்கப்பூரர்கள் இந்த ஆண்டு சம்பள உயர்வை எதிர்ப்பார்க்கலாம்: ஆய்வு

சிங்கப்பூரர்கள் இந்த ஆண்டு சம்பள உயர்வை எதிர்ப்பார்க்கலாம்: ஆய்வு

1 mins read
dc68c829-618d-4c82-8753-8773c1c1709e
சிங்கப்பூரர்கள் இந்த ஆண்டு சம்பள உயர்வை எதிர்ப்பார்க்கலாம்: ஆய்வு படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரர்கள் இவ்வாண்டு 3.8 விழுக்காடு சம்பள உயர்வை எதிர்ப்பார்க்கலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பொருளியல் மீட்சியடைந்து வரும் நிலையில், ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த தயார் என்று நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

பணவீக்கம், திறனாளர்களைத் தக்கவைத்துக்கொள்வது ஆகிய இரு காரணங்களுக்காக ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிடுகின்றன.

வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் எனும் ஆலோசனை நிறுவனம், சுமார் 450 நிறுவனங்களிடம் இதன் தொடர்பில் ஆய்வை நடத்தியது.

ஆசிய பசிஃபிக் நாடுகளில் நடத்தப்பட்ட அதே ஆய்வில், சம்பளங்கள் சுமார் 5 விழுக்காடு உயரும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, சிங்கப்பூரர்கள் அதிகமாகவே சம்பாதிக்கின்றனர்.

ஆனால், ஆஸ்திரேலிய ஊழியர்களுடன் காட்டிலும் சம்பளத்தில் சிங்கப்பூரர்கள் பின்தங்கியுள்ளனர்.

இதற்கிடையே, 68 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் இவ்வாண்டு தங்கள் வேலையிலிருந்து விலக திட்டமிட்டுள்ளனர்.

லிங்ட்இன் எனும் வேலை வாய்ப்புத் தளம் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.