குழந்தையைத் தூக்கி நிறுத்திய உதவிக்கரங்கள்

குழந்தையைத் தூக்கி நிறுத்திய உதவிக்கரங்கள்

2 mins read
a4fb3d01-2b4e-4399-b086-60415e607922
'நமது குழந்தை இப்படியே முடங்கி விடுமோ' என்று களங்கிய பெற்றோர் இன்று அந்தக் குழந்தை, உதவியுடன் நடப்பதையும் சைக்கிள் ஓட்டு வதையும் கண்டு எல்லை இல்லா மகிழ்ச்சி அடைகின்றனர். (படத்தில்) உற்சாகத்துடன் தேவ்தன் தேவ ராஜ்.படம்: திருவாட்டி ஷு வென் தேவராஜ் -

$3 மி. அள்ளிக்கொடுத்து அரவணைப்பு

இரண்டு வயது தேவ்­தன் தேவ­ராஜ் ஒரு­வ­கை­யான நரம்­புத்­தசை நோயால் பாதிக்­கப்­பட்ட குழந்தை. மிக­வும் பல­வீ­ன­ம­டைந்து முடங்­கிப்­போன அந்­தக் குழந்தை, சிகிச்­சைக்­குப் பின்­னர் ஒரு­வ­ரின் துணை­யு­டன் நிற்­கிறது, நடக்­கிறது. 'உல­கின் ஆக விலை உயர்ந்த மருந்து' மூலம் அளிக்­கப்­பட்ட சிகிச்­சைக்­குத் தேவை­யான பணத்­திற்­காக நிதி திரட்­டப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து ஏறக்­கு­றைய $3 மில்­லி­யன் நன்­கொடை திரண்­டது.

குழந்­தை­யின் தாயார் திரு­வாட்டி ஷு வென் தேவ­ராஜ் கட்­டட உள்­வ­டி­வ­மைப்­பா­ளர். அவ­ரது கண­வர் அர­சாங்க ஊழி­யர். இரு­வ­ரின் வய­தும் 33. இவர்­

க­ளின் ஒரே குழந்தை தேவ்­தன்.

ஒரு மாதக் குழந்­தை­யாக இருந்­த­போது தேவ்­தனுக்குத் தண்டு­வட தசைச் சிதைவு ஏற்­பட்­டது. இத­னால் அந்­தக் குழந்­தை­யின் தசை பல­வீ­ன­ம­டைந்து நாளுக்கு நாள் மோச­ம­டைந்­தது. இதற்­குச் சிகிச்சை அளிக்­கா­விட்­டால் பதின்ம வய­தில் ஒட்­டு­மொத்த நட­மாட்ட சக்­தி­யை­யும் தேவ்­தன் இழக்­கக்­கூ­டும் என்று கூறப்­பட்­டது.

"ஓராண்­டுக்கு முன்­னர், எங்­கள் குழந்தை நடக்­குமா என்­பதை என்­னா­லும் என் கண­வ­ரா­லும் கற்­பனை செய்­து­கூட பார்க்க இய­லாத அள­வுக்கு நிலைமை இருந்­தது. குழந்­தை­யால் நிற்­க­வும் முடி­ய­வில்லை.

"ஆனால் இப்­போது ஆள் அல்­லது பொருள் துணை­யு­டன் அவன் நடப்­ப­தை­யும் முச்­சக்­கர சைக்­கிள் ஓட்­டு­வ­தை­யும் நாங்­கள் காண்­கி­றோம். இது ஓர் அதி­சய நிகழ்வு," என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் திரு­வாட்டி ஷு கூறி­னார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்து நாட்­களில் சுமார் 30,000 பேர் நன்­கொடை அளித்­த­தன் மூலம் $2.87 மில்­லி­யன் நிதி திரண்­டது. தேவ்­தனின் சிகிச்­சைக்கு ஆகும் செல­வுக்­காக இந்த நிதித் திரட்டை 'ரே ஆஃப் ஹோப்' என்­னும் அற­நி­று­வ­னம் நடத்­தி­யது.

தங்­க­ளது தளத்­தில் ஒரே ஒரு­வ­ருக்­காக திரட்­டப்­பட்ட ஆக அதி­கத் தொகை இது என்று அற­நி­று­வ­னத்­தின் பொது மேலா­ளர் திரு டான் என் கூறி­னார்.

கடந்த ஆண்டு இந்­நி­று­வ­னம் தனது நிதித் திரட்­டுத் தளம் மூலம் திரட்­டிய மொத்த தொகை­யான $4.4 மில்­லி­ய­னில் மூன்­றில் இரு பங்கு இந்­தக் குழந்­தைக்­கான நன்­கொடை நிதி.