சிங்கப்பூரின் மீட்சியில் நிலவும் இடையூறுகளைச் சமாளிக்க இங்குள்ள முதலாளிகள் தங்களது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கத் தயாராகி வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பொருளியல் நிலவரம் மேம்பட்டு வருவதைத் தொடர்ந்து அவர்கள் இதற்கு முன்வந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டு உள்ளது.
இந்த ஆண்டு சராசரியாக 3.8 விழுக்காடு சம்பள உயர்வு தர இங்குள்ள முதலாளிகள் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடும் ஆய்வு, இது கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட 3.4 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம் என்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 456 உள்ளூர் நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வை 'வில்லிஸ் டவர்ஸ் வாட்சன்' என்னும் ஆலோசனை நிறு
வனம் மேற்கொண்டது.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் 5,728 நிறுவனங்களில் இந்நிறு
வனம் ஆய்வு நடத்துகிறது.
சிங்கப்பூர் முதலாளிகள் சம்பள உயர்வுக்குத் தயாரானபோதிலும் இந்த வட்டாரத்தில் உள்ள நிறு
வனங்கள் வழங்கும் சராசரி 5.08 விழுக்காடு சம்பள உயர்வைக் காட்டிலும் இது குறைவு என்கிறது ஆய்வு.
"இருந்தபோதிலும் உயர்ந்த சம்பளம் பெறுவோரில் சிங்கப்பூர் ஊழியர்களும் உள்ளனர்.
"ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றுடன் ஒப்பிடும் அளவுக்கு இவர்களின் சம்பள விகிதம் உள்ளது.
"ஆனாலும் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் பின்தங்கி உள்ளது," என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
செலவுகள், விலைகள் மற்றும் ஊதியம் ஆகியன இந்த ஆண்டு உயரும் என்ற சந்தேகம் நிலவு
வதாக 'வில்லிஸ் டவர்ஸ் வாட்சன்' நிறுவனத்தின் எட்வர்ட் சு தெரிவித்துள்ளார்.
"ஆசிய பசிபிக் வட்டாரத்தின் விலைக் குறியீடு சில சந்தைகளில் 3 விழுக்காடும் அதற்கு மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.
"அதனால், சம்பள உயர்வை ஊழியர்களின் வாழ்க்கைச் செலவினத்தின் அடிப்படையில் முதலாளிகள் கணக்கிடக்கூடும்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.

