எல்லாப் பிரிவுகளிலும் ஏற்றம் கண்ட சிஓஇ கட்டணங்கள்

எல்லாப் பிரிவுகளிலும் ஏற்றம் கண்ட சிஓஇ கட்டணங்கள்

1 mins read
fa9c33ae-15aa-42b5-bb76-722df3673b9f
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வாகன உரி­மைச் சான்­றி­தழ் (சிஓஇ) கட்­ட­ணங்­கள் நேற்­றைய ஏலத்­தில் எல்லா வகை வாக­னங்­க­ளுக்­கும் அதி­க­ரித்­தது.

இவற்­றில் 1,600சிசிக்கு மேல் உள்ள பெரிய, சக்தி வாய்ந்த கார்­

க­ளுக்­கான கட்­ட­ணம் ஆக அதி­க­மாக உயர்ந்­தது.

இரு­ வா­ரங்­க­ளுக்கு ஒரு­முறை நடத்­தப்­படும் ஏலம் இதற்கு முன்­னர் ஜன­வரி 5ஆம் தேதி நடை­பெற்­ற­போது இந்த கார்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் $77,700 ஆக இருந்த நிலை­யில் நேற்று அது

5.5 விழுக்­காடு அதி­க­ரித்து $82,001 என முடி­வ­டைந்­தது.

இதற்கு அடுத்த பெரிய ஏற்­றம் மோட்­டார்­சைக்­கிள் பிரி­வில் நிகழ்ந்­தது. முந்­திய ஏலத்­தில் $9,689 ஆக இருந்த கட்­ட­ணம் நேற்­றைய ஏலத்­தில் 3.2 விழுக்­காடு அதி­க­ரித்து $10,000ஐ தொட்­டது.

வர்த்­தக வாக­னங்­க­ளுக்­கான கட்­ட­ணம் சிறிய ஏற்­றம் கண்­டது. $42,200ஆக இருந்த அந்­தக் கட்­ட­ணம் 1.9 விழுக்­காடு அதி­க­ரித்து $43,001 ஆனது.

மோட்­டார்­சைக்­கிள் தவிர்த்து இதர எல்லா வகை வாக­னங்­களுக்குமான சிஓஇ கட்­ட­ணத்­தி­லும் சிறிய ஏற்­றம் நிகழ்ந்­தது. $82,501 என்­பது $83,911 ஆக முடி­வ­டைந்­தது. இந்த ஏற்­றத்­தின் விகி­தம் 1.7 விழுக்­காடு.

சிறிய கார்­க­ளின் வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணம் மட்­டும் 0.5 விழுக்­காடு, அதா­வது $299 அதி­க­ரித்து $57,898 ஆனது.

இந்த ஏலத்திற்கு 1,775 விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 2,513 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.