நாடாளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்கள் தங்களது கூற்றுக்கு ஆதாரங்களை வைத்திருப்பார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் ஆதாரத்துடன் எதனையும் எடுத்துரைக்க உறுப்பினர்கள் தயங்கக்கூடாது என்றும் மன்ற நாயகர் டான் சுவான்-ஜின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது ஃபேஸ்புக்கில் தெரிவிக்கையில், ஒவ்வோர் உறுப்பினரும் தங்களது விருப்பப்படி பேச, விவாதிக்க, கேள்வி எழுப்பத் தொடங்கினால் அது பொருத்தமற்றதாக அமை
வதோடு மன்றத்தில் அதனால் குழப்பம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஓர் உறுப்பினருக்கும் பேச தாம் அனுமதி தராவிட்டால் அதற்கான ஒதுக்கீடு அவருக்கு இல்லை என்றோ விதிக்கு முரணாக அவர் நடந்துகொள்கிறார் என்றோ பொருள்படும் என்று திரு டான் கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட நேரங்களில் மன்றத்தின் ஒழுங்கையும் கண்ணியத்தையும் கட்டிக்காக்கும் பொறுப்பு தம்மைச் சார்ந்ததாக இருக்கும் என்றார் அவர்.
"நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை மன்ற நாயகரும் அதற்கென உள்ள விதிகளும் தீர்மானிக்கின்றன.
"மன்ற நாயகரால் அழைக்கப்
படாதபோது உறுப்பினர்கள் உரையாற்றக்கூடாது என்பதும் விதியில் உள்ளது.
"அதை மீறி பேசும் உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்தும் உத்தரவை மன்ற நாயகரால் பிறப்பிக்க முடியும்.
"மன்றத்தில் உறுப்பினர்கள் பொதுவாகப் பேசவேண்டுமே தவிர 'உங்கள் பேச்சு', 'நீங்கள் சொன்னீர்கள்' என்று மற்றோர் உறுப்பினரிடம் நேரடியாகப் பேசக்கூடாது.
"மேலும், ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை மன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பக்
கூடாது," என்று திரு டான் தெரிவித்துள்ளார்.

