சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,448 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 990 பேர் உள்ளூர்வாசிகள், 458 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
அன்றைய தினம் கொவிட்-19 தொற்று காரணமாக யாரும் மரண மடையவில்லை என சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனவே மரண எண்ணிக்கை 843 ஆகத் தொடருகிறது. திங்கட்கிழமை 1,165 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கி அன்றாடத் தொற்று எண்ணிக்கை 1,000க்குக் குறையாமல் நீடிக்கிறது.
ெசவ்வாய்க்கிழமை தொற்று எண்ணிக்கை அதிகரித்த அதே நேரம் வாராந்திர கிருமிப் பரவல் விகிதமும் சற்று கூடியது. திங்கட்கிழமை 1.60 ஆக இருந்த அந்த விகிதம் நேற்று முன்தினம் 1.76 ஆக அதிகரித்தது.
இது 1க்கு மேல் இருந்தால் சமூக அளவில் கிருமிப் பரவல் அதிகரித்து வருவதாகப் பொருள்.
மொத்த கொவிட்-19 தொற்று நிலவரம் இவ்வாறிருக்க, ஓமிக்ரான் தொற்று செவ்வாய்க்கிழமை 589 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 85 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்; 504 பேர் உள்ளூர்வாசிகள்.
திங்கட்கிழமை 609 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அன்றைய தினம் நிலவரப்படி சிங்கப்பூரில் தொற்றுப் பரவல் தொடங்கியது முதல் 294,462 பேர் பாதிக்கப்பட்டனர். 247 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 16 பேருக்கு செயற்கை உயிர் வாயு தேவைப்படுகிறது. இதர 13 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இதற்கிடையே, தடுப்பூசி நில
வரம் குறித்த தகவல்களையும் அமைச்சு வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமை நிலவரப்படி, தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் மக்கள்தொகையில் 91 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்த எண்ணிக்கையில் 5 வயது முதல் 11 வயது வரையிலான சிறுவர்களும் டிசம்பர் 27ஆம் தேதி முதல் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அன்றைய தினம்தான் சிறுவர்
களுக்கு தடுப்பூசி போடும் நட
வடிக்கை தொடங்கியது.
மொத்த மக்கள்தொகையில் சுமார் 53 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

