டிரீம் குரூஸஸ் நிறுவனம் சிங்கப்பூரில் 'வேர்ல்ட் டிரீம்' உல்லாசக் கப்பலைத் தொடர்ந்து இயக்கும் எனத் தெரியவந்துள்ளது. இதன் தலைமை நிறுவனமான ஜென்டிங் ஹாங்காங் வர்த்தக நடவடிக்கை களை நிறுத்த முயன்று வரும் நிலையிலும் கப்பல் பயணத்தைத் தொடர்ந்து நடத்த டிரீம் குரூஸஸ் முடிவு எடுத்துள்ளது.
இது தொடர்பாக டிரீம் குரூஸஸ் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசினார்.
ஜென்டிங் ஹாங்காங் நிறுவனத்தின் அடிப்படை சொத்து
களைப் பாதுகாக்கவும் அதன் நற்பண்புகளைக் கட்டிக்காக்கவும் அந்நிறுவனத்தின் சில வர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
ஜென்டிங் ஹாங்காங் நிறுவனத்தின் எம்வி வேர்ஃப்டன் எனப்படும் ஜெர்மானிய கப்பல் கட்டும் துணை நிறுவனம் நொடித்துப் போனதைத் தொடர்ந்து உல்லாசக் கப்பல்களை நடத்த போதுமான நிதி இன்றி தடுமாறி வருகிறது.
2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டிரீம் குரூஸஸ் சிங்கப்பூரில் ஜென்டிங் டிரீம் என்னும் உல்லாசக் கப்பலை இயக்கியது.
ஜென்டிங் ஹாங்காங் நிறு
வனத்தின் ஸ்டார் குரூஸஸ் என்னும் கப்பலும் அப்போது இங்கு இயங்கி வந்தது.
கொள்ளைநோய் பரவலுக்கு மத்தியில் 2020 நவம்பரில் மீண்டும் உல்லாசக் கப்பல் போக்கு
வரத்து தொடங்கியபோது டிரீம் குரூஸஸின் வேர்ல்ட் டிரீம் மட்டுமே சிங்கப்பூரில் இயங்கியது.
குறைந்தபட்சம் 200,000 பயணிகளை அந்தக் கப்பல் ஈர்த்தது. இந்த ஆண்டின் உல்லாசக் கப்பல் போக்குவரத்துக்கும் வலுவான தேவை நிலவுகிறது.
டிரீம் குரூஸஸின் இணையத்
தளத்தை நேற்று பிற்பகல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சோதித்தபோது உல்லாசக் கப்பல் பயணத்துக்கான முன்பதிவை அது தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தது.

