அண்மைய குறுந்தகவல் மோசடியில் சிக்கிய அனைத்து ஓசிபிசி வாடிக்கையாளர்களுக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவர்கள் இழந்த பணத்ைத வங்கி திருப்பியளிக்கும் என்று ஓசிபிசி வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஏற்கெனவே 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழந்த பணம் திருப்பித் தரப்பட்டுள்ளது.
எஞ்சிய வாடிக்கையாளர் களுக்கு அடுத்த வாரத்திற்குள் பணத்தை வழங்க ஏற்பாடு செய்து வருவதாக ஓசிபிசி வங்கி தெரிவித்தது.
"இவ்விவகாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அவசியம். ஒவ்வொரு சம்பவத்தையும் சரிபார்க்க அவகாசம் தேவைப் படுகிறது. ஒவ்வொரு விவகாரத் தையும் நியாயமாக, சரியாக நடத்து வதற்கு இந்த நடைமுறை முக்கியம்," என்று அறிக்கையில் ஓசிபிசி குழுமத்தின் தலைமை நிர்வாகி ஹெலன் வோங் வலியுறுத்தினார்.
இதற்காக அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்கு அவர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
போலியான இணையத் தளங் களின் மோசடிக்கு ஆளாக நேரிடும் என்பதை அறியாத வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். இதனால் 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மோசடியிலிருந்து தப்பியுள்ளனர் என்றார் அவர்.
ஏறக்குறைய 470 ஓசிபிசி வாடிக்கையாளர்கள் கடந்த டிசம்பரில் நடந்த மோசடியில் குறைந்தது 8.5 மில்லியன் வெள்ளியை இழந்துள்ளனர். சிலர் தங்களுடைய குடும்பத்துக்காக பல ஆண்டுகள் உழைத்துச் சேமித்த பணத்தை இழந்துவிட்டனர். ெபரும்பாலான ஏமாற்றுச் சம்பவங்களில் ஓசிபிசி வங்கியைப் போன்ற போலியான இணையத் தளத்துக்கு இட்டுச்செல்லும் இணையத் தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. வங்கிக் கணக்கில் நுழையும்படி கூறப் படுவதால் சில வாடிக்கையாளர்கள் அந்தப் போலி இணையத் தளத்திற்குச் சென்று மறைச்சொல் உள்ளிட்ட தகவல்களுடன் தங்களுடைய வங்கிக் கணக்கில் நுழைய முயற்சி செய்கின்றனர்.
ஆனால் ஏமாற்றுப் பேர்வழிகள் அந்த விவரங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்துவிடுகின்றனர்.
ஓசிபிசி என்ற பெயரில் குறுந்தகவல் அனுப்பப்படுவதால் வாடிக்கையாளர்கள் எளிதில் ஏமாந்துவிடுவ தாகவும் கூறப்படுகிறது.