டிபிஎஸ் வங்கி அனுப்புவதுபோல குறுந்தகவல்கள் அனுப்பப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தனது வாடிக்கையாளர்களை டிபிஎஸ் வங்கி கேட்டுக்கொண்டது.
வங்கிக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படும் அந்த மோசடி குறுந்தகவலில், வாடிக்கையாளர்களின் மறைச் சொல் உள்ளிட்ட முக்கிய வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடுவதற்காக வடிவமைக்கப் பட்ட போலி இணையத் தளத்துக்கு இட்டுச்செல்லும் இணையத் தொடர்பு இடம்பெற்று உள்ளது.
இந்தத் தொடர்பை பின்பற்றிச் செல்ல வேண்டாம் என்று டிபிஎஸ் வங்கி வலியுறுத்தியது.
"வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை யோ, கைபேசிக்கு வரும் 'ஓடிபி' ஒரு முறை மறைச் சொல்லையோ வங்கி ஒரு போதும் கேட்காது," என்று டிபிஎஸ் வங்கி தெரி வித்தது.
வங்கியின் இணையத் தளங்களைப் போல தோற்ற மளிக்கும் இணையப் பக்கங்களை அகற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் டிபிஎஸ் நேற்று உறுதியளித்தது.

