கனவு வேலைக்கு மாறிய 100 'ஐடிஇ' மாணவர்கள்

கனவு வேலைக்கு மாறிய 100 'ஐடிஇ' மாணவர்கள்

1 mins read
3a82ac02-2d9b-4425-98cf-c2df03bee38e
-

முஹ­மது அலி முஹமது பேசா­லுக்கு தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் ஆர்­வ­மில்லை. இத­னால் 17 வயது இளை­ய­ரான அவர் கடந்த ஆண்டு இறு­தி­யில் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­க படிப்பை நிறுத்­தி­னார்.

ஆனால் வன­வி­லங்கு மற்­றும் கடல்­வாழ் உயி­ரி­னங்­க­ளு­டன் இருக்­கும் தனது கனவு வேலைக்கு அவர் மாறியுள்ளார். இதற்கு, சமு­தாய குடும்ப மேம்­பாட்டு அமைச்சு தொடங்­கிய முன்­னோடி வழி­காட்­டித் திட்­டம் கைகொ­டுத்­துள்­ளது.

"இது ஒரு முக்­கிய வாய்ப்பு. எதிர்­கா­லத்­தில் இப்­ப­டித்­தான் இருக்க விரும்­பு­கி­றேன்," என்று விலங்கியல் தோட்டத்தில் விலங்கு பரா­ம­ரிப்பு உத­வி­யா­ள­ராக இருக்­கும் முஹ­மது அலி தெரி­வித்­தார்.

இரண்டு ஆண்­டு­கா­லத்­திற்கு நீடிக்­கும் வாழ்க்­கைத் தொழில் ஆலோ­சனை மற்­றும் வழி­காட்டி முகா­மில் பங்­கேற்­கும் 100 இளை­யர்­களில் இவ­ரும் ஒரு­வர்.

கடந்த ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் நிதி ஒதுக்­கீடு தொடர்­பான விவா­தத்­தின்­போது ஐடிஐ கல்­வியை பாதி­யில் கைவி­டும் மாண­வர்­க­ளுக்­காக இந்­தத் திட்­டம் அறி­விக்­கப்­பட்­டது.

மாண­வர்­கள் தங்­க­ளு­டைய விருப்­பத்தைத் தேர்வு செய்து வாழ்க்­கைத் தொழி­லாக அமைத்­துக்கொள்ள தொழில் துறை வழி­காட்­டி­க­ளின் கீழ் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்­பைப் பெறு­கின்­ற­னர்.

கிளார்க் கீயில் நேற்று இந்த முன்­னோ­டித் திட்­டத்தை தொடங்கி வைத்துப் பேசிய சமு­தாய குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் நாடாளுமன்­றச் செய­லா­ள­ரான எரிக் சுவா, ஒவ்­வொரு இளை­ய­ரும் எத்­த­கைய பின்­னணி, சூழ­லைக் கொண்­டிந்தாலும் தகுந்த வழியைக் காட்டினால் அவர்­களாலும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று தெரி வித்தார்.