முகக்கவசத்தை அணியாத பிரிட்டிஷ்காரர்

முகக்கவசத்தை அணியாத பிரிட்டிஷ்காரர்

2 mins read
2e3776da-401f-42f7-b021-60064fa2ec2b
-

கிரு­மிப் பர­வ­லுக்கு இைடயே பொது இடங்­களில் மூன்று முறை முகக்­க­வ­சம் அணி­யா­மல் இருந்த பிரிட்­டிஷ்­கா­ரர் மீது நேற்று கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) சட்­டத்­தின் கீழ் குற்­றம்­சாட்­டப்­பட்­டது.

சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான பிலிப் ரிச்­சர்ட் மோக்­ரிட்ஜ், 2020 நவம்­ப­ருக்­கும் கடந்த ஆண்­டின் மே மாதத்­துக்­கும் இடையே அந்­தக் குற்­றச்­செ­யல்­களை புரிந்­தார் என்று நீதி­மன்ற விசா­ர­ணை­யில் தெரி­விக் கப்­பட்­டது.

2020 நவம்­பர் 26ஆம் தேதி செங்­காங் எம்­ஆர்டி நிலை­யத்­தில் 54 வய­தான மோக்­ரிட்ஜ் முகக்­க­வ­சம் அணி­யா­தது முதல் குற்­றச்­செ­ய­லா­கும்.

அதே ஆண்­டில் டிசம்­பர் 19ஆம் ேததி இரவு 11.00 மணி­ய­ள­வில் சிராங்­கூன் எம்­ஆர்டி நிலை­யத்­தி­லும் அவர் முகக்­க­வ­சம் அணி­ய­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு மே 16ஆம் தேதி லிட்­டில் இந்­தி­யா­வில் கிச்­ச­னர் ரோட்­டில் உள்ள சிட்டி ஸ்கு­வேர் மாலில் அவர் மீண்­டும் முகக்­க­வ­சம் அணி­யா­மல் இருந்­தார் என்று கூறப்­ப­டு­கிறது. நேற்று நீதி­மன்ற விசா­ர­ணைக்கு அவர் முகக்­க­வ­சம் அணிந்து காணப்­பட்­டார்.

பின்­னர் பேசிய மோக்­ரிட்ஜ் குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள விரும்­பு­வ­தா­க­வும் வழக்­க­றி­ஞர் யாரை­யும் அமர்த்­தப்­போ­வ­தில்லை என்­றும் தெரி­வித்­தார். அவரை 15,000 வெள்ளி பிணைத் தொகை­யில் விடு­விக்க நீதி­மன்­றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இந்த வழக்கு பிப்­ர­வரி 3ஆம் தேதி மீண்­டும் விசா­ர­ணைக்கு வரு­கிறது.

முதல்­முறை புரி­யும் ஒவ்­வொரு குற்­றச்­செ­ய­லுக்­கும் ஆறு மாதம் வரை சிறைத் தண்­ட­னை­யும் 10,000 வெள்ளி வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம். இதே குற்­றத்தை மீண்­டும் புரி­வோ­ருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்­ட­னை­யும் 20,000 வெள்ளி வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­டக்­கூ­டும்.