குறுந்தகவல்களில் இணையத் தொடர்புகளை அனுப்பி ஏமாற்று வேலைகள் நடப்பதால் சிங்கப்பூர் வங்கிகள் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக வங்கிகள் அனுப்பும் குறுந்தகவலில் இனி இணையத் தொடர்பு இடம் பெறாது. இந்தப் புதிய கூடுதல் நடவடிக்கையை நேற்று சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் நேற்று இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன. இதற்கிடையே தனிநபர் விவரங்களைக் கேட்டு நீதிமன்றம் அனுப்புவதைப் போல போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதால் எச்சரிக்கை தேவை என்று பொதுமக்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நீதிமன்றத்திலிருந்து ஆவணங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாகக் கூறி போலி மின்னஞ்சல்கள் அனுப்பப் படுகின்றன.

