முகக்கவசம் விற்பதாகக் கூறி ஏமாற்றிய இளையருக்கு 14 வாரம் சிறை

முகக்கவசம் விற்பதாகக் கூறி ஏமாற்றிய இளையருக்கு 14 வாரம் சிறை

2 mins read
306ebb6a-e2aa-44e3-a0e8-96a6bbffca81
நீதிமன்றத்துக்கு நேற்று வந்த பிலிப் ரிச்சர்ட் மோக்ரிட்ஜ் முகக்கவசம் அணிந்து காணப்பட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த 2020ல் கொள்­ளை­நோய் பரவ ஆரம்­பித்த கால­கட்­டத்­தில் முகக்­க­வ­சத்­துக்­குத் தட்­டுப்­பாடு இருந்­தது. இத­னால் பொது­மக்­களில் சிலர் அச்­ச­ம­டைந்­த­னர். இத­னைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்ட முஹ­மது சுல்­ஹில்மி ஆரிஃப் என்­ப­வர் முகக்­க­வ­சங்­களை விற்­ப­தா­கக் கூறி ஏமாற்­றி­யி­ருக்­கி­றார்.

முகக்­க­வ­சத்­துக்­காக அல்­லா­டி­ய­வர்­க­ளி­டம் மொத்­தம் $2,302.50 வரை பணத்­தைப் பெற்றுக்கொண்ட அந்த 23 வயது வாலி­பர் அவர் களுக்கு முகக்­க­வ­சங்­களை வழங்­க­வில்ைல.

சிங்­கப்­பூ­ர­ரான முஹ­மது சுல்ஹில்மி ஆரிஃப் தன் மீது சுமத்­தப்­பட்ட அனைத்து குற்­றச்­சாட்­டு ­க­ளை­யும் நேற்று ஒப்­புக் கொண்­டார். அவ­ருக்கு 14 வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

மூவ­ரி­டம் அவர் $1,515 வரை ஏமாற்­றி­னார். மேலும் முறை­கே­டாக $1,700 ஆதா­யம் பெற்ற குற்­றச்­சாட்­டை­யும் அவர் ஒப்­புக்கொண்­டார்.

அவர் மீதான இதர நான்கு குற்றச்­ செ­யல்­களும் கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன.

அவ­ரி­டம் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் $22.50 முதல் $750 வரை கொடுத்­தி­ருந்­த­னர்.

கேரோசல் இணை­யத் தளத்­தில் 'சேவி­யர்­டான்556' என்ற பெய­ரில் ஸுல்­ஹில்மி தனக்­கென ஒரு கணக்கு ஒன்றை நடத்தி வந்­ததாக நீதி­மன்­றத்­தில் பேசிய அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞ­ரான பெஞ்­ச­மின் சாமி­நா­தன் தெரி­வித்­தார்.

அந்­தத் தளத்­தில் 2020 பிப்­ர­வரி 21ஆம் தேதி அன்று ஐம்­பது முகக்­க­வ­சங்­கள் அடங்­கிய ஒரு பெட்­டி­யின் விலை 15 வெள்ளி என்று ஸுல்­ஹில்மி குறிப்­பிட்டு இருந்­தார்.

அதே நாளில் ஸுல்­ஹில்­மியை வாட்ஸ்­ஆப் மூலம் தொடர்­பு­கொண்ட 41 வயது நபர் ஆட­வர் ஒரு­வர், 300 பெட்டி முகக்­க­வ­சங்­களை வாங்க 3,750 வெள்ளி கொடுத்தார். ஆனால் பல­முறை கேட்­டும் ஸுல்­ஹில்மி அவ­ருக்கு முகக்­க­வ­சங்­களை வழங்­க­வில்லை.

"தன்­னி­டம் 300 பெட்டி முகக்­க­வ­சங்­கள் இல்­லா­மல் அதனை வழங்­கும் எண்­ண­மும் இல்­லா­மல் பாதிக்­கப்­பட்­ட­வரை குற்­றச்­செ­யல் புரிந்­த­வர் ஏமாற்­றி­யி­ருக்­கி­றார்," என்று நீதி­மன்­றத்­தில் வழக்­க­றி­ஞர் மேலும் தெரி­வித்­தார்.