தீ; மருத்துவமனையில் ஐவர்

தீ; மருத்துவமனையில் ஐவர்

1 mins read
dcef00b3-3dc4-4974-b475-9758814378ab
வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்களும் எரிந்து கருகிவிட்டன.முதற்கட்ட விசாரணையில் மின் சைக்கிளுக்கு மின்னூட்டும்போது தீ ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரிய வருகிறது. -

ஜூரோங் வெஸ்ட் அடுக்­கு­மாடி வீட்­டில் மின் சைக்­கிள் தீப்பிடித்­த­தில் ஐந்து பேர் மருத்­து­வ­ம­னைக்கு கொண்­டு­செல்­லப்­பட்­ட­னர்.

சைக்­கி­ளுக்கு மின்­னூட்­டும் போது, தீ பிடித்­தி­ருக்­கக்­கூ­டும் என முதல்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. சம்­ப­வம் குறித்து சிங்­கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படைக்கு நேற்று காலை சுமார் ஆறு மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­தது. புளோக் 723, ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 5ல் உள்ள ஒரு மூன்­றா­வது மாடி வீட்­டில் தீ மூண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

தீய­ணைப்­பா­ளர்­கள் வரு­வ­தற்கு முன்பே, வீட்­டில் இருந்த ஆறு பேர் வெளி­யே­றி­விட்­ட­தா­கக் கூறப்பட்­டது. அவர்­க­ளோடு, அக்­கம்­பக்­கத்­தா­ரும் தங்­கள் வீடு­களை விட்டு வெளி­யே­றி­னர்.

சம்­ப­வம் நடந்த வீட்­டில் இருந்த ஐவர், புகையை சுவா­சித்­த­தால் பாதிக்கப்பட்டனர் என்றும் மருத்­து­வம­னைக்­கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வர­வேற்பு அறை­யில் பல பொருட்­கள் கரு­கிய காட்­கி­ளைக் குடிமை தற்­காப்­புப் படை தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பகிர்ந்­து­கொண்­டது. தனி­ந­பர் நட­மாட்ட சாத­னங்களை நீண்ட நேரத்­துக்கு மின்­ன­னூாட்ட வேண்­டாம் என குடிமை தற்­காப்­புப் படை பொது­மக்­க­ளைக் கேட்­டு­கொண்­டது.