செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய ஊழியரணித் திட்டம்

செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய ஊழியரணித் திட்டம்

2 mins read
bd974a55-07bf-4b7b-9ac5-baa3011ba611
தகவல்தொடர்பு தொழில்நுட்ப ஐடிஇ நைட்டெக் மாணவர்கள் அஷிக் அகமது (இடம்), ஹஸிக் அஷ்ரஃப் இருவரது செயல் விளக்கத்தை கல்வி அமைச்சர் சான் சுன் சிங் பார்வை இடுகிறார்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் (ஐடிஇ) துவங்கி வைக்­கப்­பட்­டுள்ள புதிய திட்­டத்­தின்­கீழ், செயற்கை நுண்­ண­றிவு சார்ந்த திறன் மேம்­பாட்­டில் 2,000 மாண­வர்­கள் ஈடு­படு­வர்.

சிங்­கப்­பூ­ரில் செயற்கை நுண்­ணறிவு பர­வ­லாக நாடப்­படும் என்­ப­தால் ஊழி­யர் அணி­யில் ஏற்­ப­டக்­கூ­டிய இடை­வெ­ளி­க­ளைச் சமா­ளிக்க இந்­தப் புதிய திட்­டம் உத­வும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

'ஐடிஇ', 'நிவி­டியா' எனும் அனைத்­து­லக தொழில்­நுட்ப நிறு­வனம் ஆகி­ய­வற்­றுக்கு இடையே நேற்று செய்­து­கொள்­ளப்­பட்ட பங்­கா­ளித்­துவ ஒப்­பந்­தத்­தின்­படி, செயற்கை நுண்­ண­றிவு அமைப்­பு­மு­றை­யைச் செயல்­ப­டுத்­தத் தேவை­யான பயிற்­சியை ஏப்­ரல் மாதத்­தில் கிட்­டத்­தட்ட 400 ஐடிஇ மாண­வர்­கள் பெறத் தொடங்­கு­வர்.

செயற்கை நுண்­ண­றிவு அமைப்பு­மு­றை­களை நடை­மு­றைப்­படுத்­தும் தொழில்­துறை அனு­பவத்தை இம்­மா­ண­வர்­கள் பெறு­வர் என்று நேற்­றைய ஒப்­பந்த நிகழ்­வில் கலந்­து­கொண்ட கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­தார்.

செயற்கை நுண்­ண­றி­வைக் கொண்டு சிங்­கப்­பூர் அதன் பொரு­ளி­யலை 2030ஆம் ஆண்­டுக்­குள் உரு­மாற்­றத் திட்­ட­மிட்­டுள்­ள­தற்கு இப்­பு­திய முயற்சி உத­வும் என்­றார் அவர்.

அடுத்த மூன்று ஆண்­டு­களில் ஏறத்­தாழ 2,000 மாண­வர்­கள் இப்­பு­திய திட்­டம் வழி பல­ன­டை­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பல்­க­லைக்­க­ழக பட்­ட­தா­ரி­க­ளால் மட்­டுமே சிங்­கப்­பூ­ரின் தேசிய செயற்கை நுண்­ண­றிவு உத்­தி­முறையை நிறை­வேற்ற முடி­யாது என்று குறிப்­பிட்ட திரு சான், பல­தரப்­பட்ட திறன் தொகுப்­பு­களும் வேலைப் பொறுப்­பு­களும் தேவை என்­றார்.

ஒப்­பந்­தப்­படி, ஐடிஇ அதன் முதல் செயற்கை நுண்­ண­றி­வுப் பயிற்சி வளா­கத்­தை­த் தொடங்­க­ உள்­ள­தா­கக் கூறப்­பட்­டது. முதல் காலாண்­டிற்­குள் 'நிவி­டியா'வின் அதி­ந­வீன கணி­னித் தளத்­தைக் கொண்டு வளா­கம் செயல்­படும்.

சுமார் 30 ஆண்­டு­க­ளுக்கு முன் கலி­ஃபோர்­னி­யா­வில் நிறு­வப்­பட்ட 'நிவி­டியா', அனைத்­து­லக விளை­யாட்டு ஆர்­வ­லர்­கள் பயன்­ப­டுத்­தும் வரை­கலை அட்­டை­க­ளுக்­குப் பெயர் போனது.