முதலீட்டாளர்கள்: சாதனையளவு நிதியை 2022ல் எதிர்பார்க்கலாம்

முதலீட்டாளர்கள்: சாதனையளவு நிதியை 2022ல் எதிர்பார்க்கலாம்

1 mins read
1dd3c00a-1216-4d44-bf7e-128f4891ebc8
-

புதிய உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இவ்வாண்டு சாதனை அளவில் நிதி வழங்கப்படலாம் என்று முதலீட்டாளர்கள் கணித்து உள்ளனர். நம்பிக்கை தரும் பொருளியல் கண்ணோட்டம், கொள்ளைநோய் சூழலில் மின்னிலக்கச் சேவைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்தல் இவ்விரண்டாலும் இச்சாதனை அளவு நிதியை இவ்வாண்டு எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். தொழில்முனைப்பு தொடர்பான மூலதன நிதி நடவடிக்கைகள் சிங்கப்பூரிலும் வட்டார நாடுகளிலும் இவ்வாண்டு தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று புதுத்தொழில் முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அனைத்துலக அளவில் 621 பி. அமெரிக்க டாலரை (S$838 பி.) புதிய நிறுவனங்கள் திரட்டின. ஆண்டு தொடங்கிய முதல் இரண்டு வாரங்களில் சிங்கப்பூரை அடித்தளமாகக் கொண்டுள்ள புதிய நிறுவனங்களில் சில, லாபகரமான நிதியை ஈட்டியதாகவும் கூறப்பட்டது.