தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாசிர் ரிஸ் ஆற்றில் பெண்ணின் சடலம்

1 mins read
1f43d422-3335-402c-9abd-4dea6ef53b29
கூ யீ ஜுவின் உடல் சுங்கை அப்பி அப்பி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாசிர் ரிஸ் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம் மலேசியப் பெண்ணுடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

22 வயதான கூ யீ ஜு, மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக காவல் துறையினரிடம் புகார் செய்யப்பட்டது.

சென்ற ஞாயிற்றுகிழமை வேலை முடிந்து, கூ வீடு திரும்பவில்லை. அதனையடுத்து அவருடைய உறவினர், கூவின் வேலையிடுத்துக்குச் சென்று அவரைத் தேட முற்பட்டார்.

இதற்கிடையே, சுங்கை அப்பி அப்பி ஆற்றில் நேற்று அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஆற்றில் ஒரு சடலம் மிதந்துகொண்டிருந்தது குறித்து, சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படைக்கும், சிங்கப்பூர் காவல் துறைக்கும் அழைப்பு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கூவின் மரணத்தில் எவருக்கும் தொடர்பு இருக்கும் என காவல் துறை சந்தேகிக்கவில்லை.

இது குறித்து மேல் விசாரணை தொடர்கிறறு.

இந்நிலையில், கூவுக்கு மனக்கவலை இருந்திருக்ககூடும் என்று அவருடைய சகோதரர் குறிப்பிட்டார்.

அவர்களிடையே நடந்த கடைசி தொலைபேசி அழைப்பின் போது, தாம் ஒரு நாள் உயிருடன் இருக்கமாட்டேன் என கூ சொன்னாதாக அவருடைய அக்கா நினைவுகூர்ந்தார்.