சலுகை கோரும் தேவாலயங்கள்

பிப்ரவரி 1 முதல் தடுப்பூசி அடிப்படையிலான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் விரிவாக்கம்

அடுத்த மாதத்­தில் இருந்து தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் விரி­வு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

இந்த நி­லை­யில், இன்­னும் கொவிட்-19 தடுப்­பூசி போடாத வழி­பாட்­டா­ளர்­க­ளுக்கு அவற்­றில் இருந்து சலு­கை­கள் அளிக்­கும்­படி குறைந்­தது இரண்டு வழி­பாட்­டுத் தலங்­கள் அர­சாங்­கத்­தி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளன.

வரும் பிப்­ர­வரி 1ஆம் தேதி­யில் இருந்து, எல்லா நிகழ்ச்­சி­க­ளி­லும், எத்­தனை பேர் கலந்­து­கொண்­டா­லும், தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் அமல்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இப்­போது 50 பேருக்­குக் குறை­வா­னோர் பங்­கேற்­கும் நிகழ்ச்சி­களில் அவற்றைப் பின்­பற்­றத் தேவை­யில்லை.

அதா­வது, முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர், மருத்­து­வக் கார­ணங்­க­ளுக்­காக தடுப்­பூசி போடத் தகு­தி­பெ­றா­தோர் அல்­லது கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து மீண்­டோ­ரும் 12 வயது மற்­றும் அதற்­குக் கீழுள்­ளோ­ரும் மட்­டுமே ஒன்று­கூ­டல், வழி­பாட்­டுச் சேவை­கள் போன்ற நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்க இய­லும்.

அத்­து­டன், உயர்­கல்வி நிலை­யங்­கள் போன்ற இடங்­களும் பிப்­ர­வரி 1 முதல் தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­க­ளின்­கீழ் வரும். இத­னால், பகு­தி­நேர மாண­வர்­களும் வரு­கை­யா­ளர்­களும் பாதிக்­கப்­ப­ட­லாம்.

இந்­நி­லை­யில், தடுப்­பூசி போட்­டி­ருந்­தா­லும் போடா­வி­டி­னும் திருச்­சபை­யி­னர் அனை­வ­ருக்­கும் வழி­பட உரிமை உள்­ளது என்ற தங்­க­ளது நிலைப்­பாட்டை ஸியோன் சாலை­யில் உள்ள செயின்ட் பெர்னடெட் தேவா­ல­யத்­தின் பேரா­ய­ரும் பேராய கொவிட்-19 பணிக்­கு­ழு­வும் அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­வித்து வரு­கின்­றனர் என்று அத்­தே­வா­ல­யம் கடந்த ஞாயி­றன்று வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதிவு தெரி­வித்­தது.

தடுப்­பூசி போடா­தோ­ருக்­கென தொடர்ந்து தனி­யாக வழி­பாடு நடத்த சலுகை அளிக்­கும்­படி பேரா­யம் கோரிக்கை விடுத்­துள்­ள­தா­க­வும் அப்­ப­திவு கூறி­யது.

இத­னி­டையே, தடுப்­பூசி போடா­தோர் தொடர்ந்து வழி­பாட்டு நடவடிக்கைகளில் கலந்­து­கொள்ள அனு­மதி அளிக்க வேண்­டும் என்று அதி­கா­ரி­க­ளி­டம் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக சிங்­கப்­பூர் தேசிய தேவா­ல­யங்­கள் மன்­றத்­தின் தலை­மைச் செய­லா­ளர் டாக்­டர் இங்­கோய் ஃபூங் இங்­கி­யன் கூறி­னார்.

இந்­நி­லை­யில், கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்சிற்கும் சமய அமைப்புக­ளுக்­கும் இடையே பேச்சு­வார்த்தை தொடர்­கிறது என்று அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இந்து அறக்­கட்­டளை வாரி­யத்தின் நான்கு கோவில்­களில் குறிப்­பிட்ட நாள்­களில் மட்­டுமே தடுப்­பூசி போடா­தோர் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர்.

அது­போல, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர், தொற்­றி­லி­ருந்து மீண்­டோர், தடுப்­பூசி போடத் தகு­தி­பெறா­தோர், 12 அல்­லது அதற்­கும் குறைந்த வய­து­டைய குழந்­தை­கள் மட்­டுமே ஐம்­பது பேருக்­கு­மேல் கலந்­து­கொள்­ளும் தொழு­கை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்று சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) தெரி­வித்­தது.

தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களை எதிர்த்து முறை­யி­டப்­போ­வது இல்லை என்று சிங்­கப்­பூர் பௌத்த கூட்­ட­மைப்­பின் தலை­வர் செக் குவாங் ஃபிங் தெரி­வித்­தார்.

சீக்­கி­யக் கோவில்­கள் தடுப்­பூசி போடா­தோரை இப்­போதே அனு­மதிப்­ப­தில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!