அதிகமானோர் சிக்கும் நான்கு வகை மோசடிகள்

சிங்­கப்­பூ­ரில் மோச­டி­கள்அதி­க­ரித்­து­ வ­ரும் நிலை­யில், அது­கு­றித்து விழிப்­பு­டன் இருக்­கு­மாறு பொது­மக்கள் அறி­வு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றனர். அதி­க­மா­னோர் சிக்­கும் நான்கு வகை மோச­டி­கள் இங்கு பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ளன.

குறுஞ்­செய்­தி­வழி மோசடி

ஓசி­பிசி வங்கி தொடர்­பு­டைய அண்­மைய மோச­டி­களில், வங்­கி­யில் இருந்து வரு­வது போன்ற குறுஞ்­செய்­தி­களை மோச­டிப் பேர்­வழி­கள் அனுப்­பி­னர்.

தமது வங்­கிக் கணக்­கில் ஏதோ பிரச்­சினை இருப்­ப­தால் அதை உடனே சரி­செய்ய வேண்­டும் என்­றும் அக்­கு­றுஞ்­செய்­தி­யில் உள்ள இணைப்­பைச் சொடுக்­கு­மா­றும் அதைப் பெற்­ற­வர் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வார்.

உண்­மை­யா­ன­து­போல் தோன்­றும் அந்­தப் போலி இணை­யத்­தளத்­தில் உள்­நு­ழை­வுத் (login) தக­வலை­யும் ஒற்­றைப் பயன்­பாட்­டுச் சொல்­லை­யும் அவர்­கள் கொடுத்­தால், அவர்­க­ளது கணக்­கு­களில் மோச­டிப் பேர்­வ­ழி­கள் ஊடு­ருவி, பணத்­தைச் சுருட்­டி­வி­டு­வர்.

ஆள்­மா­றாட்ட மோசடி

காவல்­துறை, வேலை­வாய்ப்பு நிறு­வ­னங்­கள் அல்­லது அர­சாங்க அதி­கா­ரி­கள்­போல் மோசடிக்காரர்கள் ஆள்­மா­றாட்­டம் செய்­வ­துண்டு.

குறுஞ்­செய்தி, மின்­னஞ்­சல் அல்­லது தொலை­பேசி அழைப்புவழி நம்­ப­வைத்து, வங்­கிக் கணக்கு, அடை­யாள அட்டை எண் போன்ற விவ­ரங்­க­ளைப் பெற்று, மோசடி இடம்­பெ­று­வ­துண்டு. அதே­போல, கூகல் தேடல் முடி­வு­களில் போலி­யான நேரடி அழைப்பு எண்­களை இடம்­பெ­றச் செய்து, அதன்­வ­ழி­யாக வங்கி ஊழி­யர்­கள்போல் நாட­க­மாடி, மோச­டிப் பேர்­வ­ழி­கள் தக­வல்­களைப் பெறக்­கூ­டும்.

மின்­வ­ணிக, விநி­யோக மோசடி

இணைய வணி­கத்­த­ளங்­களில், சமூக ஊட­கங்­களில் போலி­யான பொருள்­க­ளைப் பட்­டி­ய­லி­டு­வர்.பொருளை வாங்க விரும்­பு­வோர் அதற்­கு­ரிய தொகை­யைச் செலுத்­தி­ய­தும் மோச­டிப் பேர்­வ­ழி­கள் கம்பி­நீட்­டி­வி­டு­வர்.

காதல் மோசடி

'டேட்­டிங்', சமூக ஊட­கத் தளங்கள் வழியாக நமபகமான துணைபோலக் காட்­டிக்­கொண்டு, நம்­பிக்­கை­யைப் பெற்­ற­பின், நம்­பும்­வி­த­மாக கதையை அவிழ்த்­து­விட்டுப் பணத்­தைக் கறந்துவிடுவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!