பிரதமர் லீ: கொவிட்-19 பரவல் நமது தலைமுறையின் நெருக்கடி

சிங்­கப்­பூ­ரில் சமூ­கத்­தில் கொவிட்-19 பர­வல் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யதை அடுத்து, நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டத்தை அறி­விப்­பது தொடர்­பில் கடந்த 2020 ஏப்­ரல் 1ஆம் தேதி அமைச்­ச­ரவை கூடி, விவா­தித்­தது.

அப்­போதே அதனை அறி­விக்­க­லாமா அல்­லது இன்­னும் சிறிது காலம் காத்­தி­ருக்­க­லாமா என்­பது குறித்து வெவ்­வேறு கருத்­து­கள் முன்­வைக்­கப்­பட்­டன.

கொரோனா தொற்­றுக்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் போராட்­டத்தை விரி­வாக நினை­வு­கூ­ரும் புதிய நூலுக்கு அளித்த நேர்­கா­ண­லில் பிர­த­மர் லீ சியன் லூங் இத­னைப் பகிர்ந்­து­கொண்­டார்.

“மோச­மான திசையை நோக்­கிச் செல்­கி­றோம், உட­ன­டி­யா­கச் செயல்­பட வேண்­டி­யது முக்­கி­யம் என்­ப­தைப் பாதிப்பு எண்­ணிக்கை காட்­டி­யது. அத­னால் காத்­தி­ருப்­பதில் அர்த்­த­மில்லை. அது மிகப் பெரிய முடிவு. நான் அதி­கப்­ப­டி­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­பேனே தவிர, குறை­வான நட­வடிக்­கை­களை எடுக்கமாட்­டேன்,” என்று பிர­த­மர் லீ சொன்­னார்.

கொவிட்-19 பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­து­வது என்று முடி­வெ­டுக்­கப்­பட்­ட­பின், முத­லில் அது நான்கு வாரங்­க­ளுக்கே அறி­விக்­கப்­பட்­டது.

“ஆனால், பெரும்­பா­லும் அதனை நீட்­டிக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­பதை நாங்கள் அறிந்­தி­ருந்­தோம்,” என்று திரு லீ அந்­நூ­லில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இறு­தி­யில், 2020 ஏப்­ரல் 7ஆம் தேதி­யில் இருந்து ஜூன் 1ஆம் தேதி­வரை நோய்ப் பர­வல் முறி­யடிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்­தது.

‘இன் திஸ் டுகெ­தர்: சிங்­கப்­பூர்’ஸ் கொவிட்-19 ஸ்டோரி’ எனும் தலைப்­பில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் அந்­நூலை வெளி­யிட்­டுள்ளது.

அதில், 300க்கும் மேற்­பட்­டோரை நேர்­கா­ணல் கண்ட ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர்­களின் கட்­டு­ரை­களும் 2020 ஜன­வரி 23ஆம் தேதி சிங்­கப்­பூ­ரில் கிருமி பாதிப்பு முதன்­மு­த­லா­கக் கண்­ட­றி­யப்­பட்­ட­தில் இருந்து நாடு எதிர்­கொண்ட இக்­கட்­டான தரு­ணங்­களும் தொகுக்­கப்­பட்­டுள்­ளன.

அந்­நூ­லில், கொவிட்-19 பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த அர­சாங்­கம் எடுத்த நட­வ­டிக்­கை­களை விவ­ரித்­துள்ள பிர­த­மர் லீ, கொரோனா தொற்றை ‘நமது தலை­மு­றை­யின் நெருக்­கடி’ என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

தொடக்­கத்­தில் கிரு­மித்­தொற்று அறி­கு­றி­கள் இருப்­போர் மட்­டுமே முகக்­க­வ­சம் அணிந்­தால் போதும் என்று அறி­வித்த அர­சாங்­கம், பின்­னர் அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும் என்று தனது நிலையை மாற்­றிக்­கொண்­ட­தற்­கான கார­ணங்­க­ளை­யும் பின்­ன­ணி­யை­யும் விளக்­கி­யுள்­ளார்.

நெருக்­க­டி­யின்­போது பதற்­ற­மின்றி, அமை­தி­யாக இருந்து ‘ஏற்ற இறக்­கங்­களை’ எதிர்­கொள்­வதே தமது முதன்­மை­யான வழி என்று திரு லீ பகிர்ந்­து­கொண்­டுள்­ளார்.

தியா­னம், உடற்­ப­யிற்சி செய்­யத் தொடங்­கி­விட்­ட­தா­க­வும் வார இறு­தி­களில் நடைப்­ப­யிற்சி செல்­வ­தா­க­வும் எண்­ண­வோட்­டத்­தைத் திசை­தி­ருப்ப புகைப்­ப­டம் எடுப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

கொவிட்-19 பர­வல் அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் ஒரு கடு­மை­யான சோதனை என்று நூலின் அணிந்­து­ரை­யில் குறிப்­பிட்­டுள்ள பிர­த­மர் லீ, இக்­கா­ல­கட்­டத்­தில் இளை­யர்­கள் தங்­க­ளது துணிச்­சலை­யும் மன­வு­று­தி­யை­யும் வெளிப்­படுத்தி வரு­வ­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!