ஈராண்டுகளில் 200 இடங்கள்

சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கம் அடுத்த ஆண்­டுக்­குள் கூடு­த­லாக 6.7 விழுக்காடு மாண­வர்­க­ளைச் சேர்த்­துக்­கொள்­ள­வி­ருப்­ப­தாக அதன் தலை­வ­ர் பேரா­சி­ரி­யர் சுவா கீ சாய்ங் தெரி­வித்­துள்­ளார். இதன்­படி அடுத்த ஆண்­டுக்­குள் தொழில்­நுட்­பக் கழ­கம் 3,200 மாணவர்களைச் சேர்த்­துக்­கொள்ளும்.

மூன்­றா­வது முறை­யாக நடை­பெ­றும் செயல்முறை கற்­றல் திட்ட மாநாட்­டின் தொடக்க உரையை ஆற்­றிய அவர், தொழில்­நுட்­பக் கழ­கத்தில் சென்ற ஆண்டு சுமார் 3,000 இடங்­க­ளுக்கு மொத்­தம் 13,000 விண்­ணப்­பங்­கள் வந்­த­தா­கக் கூறி­னார்.

இவ்­வாண்­டுக்­கான மாநாடு மெய்­நி­க­ராக நடை­பெ­று­கிறது. 2020ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ரில் உள்ள ஆறு பல்­க­லைக்­க­ழ­கங்­கள் மொத்­த­மாக 17,500 மாண­வர்­க­ளைச் சேர்த்­துக்­கொண்­ட­தா­க­வும் சென்ற ஆண்டு இந்த எண்­ணிக்கை 17,800ஆகக் கூடி­ய­தா­க­வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

"எங்­கள் பல்­க­லைக்­க­ழ­கம், செயல்முறை கற்­றலை நடை­மு­றைப்­ப­டுத்­தும் சிங்­கப்­பூ­ரின் முதல் பல்­க­லைக்­க­ழ­க­மாக இருப்­ப­து­டன், புதிய பல்­க­லை­யாக இருந்­தா­லும் ஆக அதி­க­மான மாண­வர்­க­ளைச் சேர்த்துக்­கொள்­வ­தில் மூன்­றா­வது இடத்தை இப்­போதே அடைந்­து­விட்­டது," என்று பேரா­சி­ரி­யர் சுவா சுட்­டி­னார். மேலும், இந்தப் பல்கலைக்கழ­கத்­தில் சேர்ந்த மாண­வர்­களில் 90 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­னோர் தங்­களுக்கு மிக­வும் விருப்­ப­மான முதல் இரண்டு பாடத் திட்­டங்­களில் ஒன்­றைத் தேர்வுசெய்ய முடிந்­ததை அவர் குறிப்­பிட்­டார்.

தொழில்­து­றை­க­ளு­டன் சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கம் இணைந்து செயல்­ப­டு­வ­தன் முக்­கி­யத்­து­வத்­தை­யும் பேரா­சி­ரி­யர் சுவா சுட்­டி­னார்.

இது, தனது பல்­க­லைக்­க­ழ­கத்­தின் 'ஐட­பிள்­யூ­எஸ்பி' எனும் ஒருங்­கி­ணைந்த வேலை, கல்­வித் திட்­டத்­திற்­குக் கைகொ­டுக்­கிறது. வேலை அனு­ப­வம், பாடங்­கள் இரண்­டின் வாயி­லா­க­வும் மாணவர்­களின் கற்­ற­லுக்கு உத­வும் இத்­திட்­டம், தொழில்­நுட்­பக் கழ­கத்­தின் குறிப்­பி­டத்­தக்க அம்­சங்­களில் ஒன்று.

சீமென்ஸ் நிறு­வ­னத்­து­டன் இணக்­கக் குறிப்பு ஒன்­றி­லும் தொழில்­நுட்­பக் கழ­கம் கையெ­ழுத்­திட்­டது. எந்­தி­ர­வி­யல் முறை­களில் வல்­லமை பெறு­வ­தற்­கான பட்­டக் கல்­வித் திட்­டத்­தைத் தொடங்க இந்த இணக்­கக் குறிப்பு கையெ­ழுத்­தா­னது.

எந்­தி­ர­வி­யல் முறை­களை உரு­வாக்­கு­வது, செயற்கை நுண்­ணறிவு போன்­ற­வற்­றில் மாண­வர்­களின் திறன்­களை வளர்க்க இந்தப் பாடத் திட்­டம் வகைசெய்யும் என்று பேரா­சி­ரி­யர் சுவா சொன்­னார்.

கூடுதலான மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!