பல எந்திரங்களை இயக்க ஒரே தளம் சோதனையிடப்படுகிறது

கைய­டக்­கக் கரு­வி­யில் உள்ள ஒரே தளத்­தின் மூலம் பல எந்­திர காவல்­துறை அதி­கா­ரி­க­ளைச் செயல்­ப­டுத்­து­வது விரை­வில் சாத்­தி­ய­மா­க­லாம். அவ்­வாறு நேர்ந்­தால் ஒரு­வர் விடுக்­கும் உத்­த­ர­வின்­படி அனைத்து எந்­தி­ரங்­களும் செயல்­படும்.'மட்­டார்' எனும் பல சூழல்­களில் இயங்­கும் தானி­யக்க எந்­தி­ரங்­கள், 'ரோவர்-எக்ஸ் ரோபோட்­டிக் டாக்' எனும் எந்­திர நாய் ஆகி­யவை இந்த ஏற்­பாட்­டில் அடங்­கும்.

'ஹெச்­டி­எக்ஸ்' எனும் உள்­துறை அமைச்­சின் அறி­வி­யல், தொழில்­நுட்ப அமைப்பு, 'என்­சி­எஸ்' தொழில்­நுட்ப நிறு­வ­னத்­து­டன் இணைந்து இந்த எந்­தி­ரங்­க­ளுக்­கான செயல்­பாட்­டுத் தளத்தை உரு­வாக்­கி­யுள்ளது. உள்­துறை அமைச்­சின் அனைத்து எந்­தி­ரங்­க­ளை­யும் ஒரே தளத்­தி­லி­ருந்து இயக்க வகை­செய்­வது இந்த முயற்­சி­யின் இலக்கு.

தற்­போது இந்தத் தளத்தை சிங்­கப்­பூர் காவல்­துறை, தோ பாயோ போக்கு­வரத்து மையத்­தில் சோத­னை­யிட்டு வரு­கிறது. இதைப் பயன்­ப­டுத்தி இங்கு பல 'மட்­டார்' எந்­தி­ரங்­க­ளைக் காவல்­துறையினர் இயக்­கு­கின்­ற­னர். கூட்­டத்­தைக் கலைப்­பது போன்­ற­வற்­றுக்­காக மாதிரி சூழல்­களை அதி­கா­ரி­கள் உரு­வாக்கி சோத­னை­யிட்டு வரு­கின்­ற­னர். சிங்­கப்­பூர் காவல்­து­றை­யின் வருங்­கா­லச் செயல்­பா­டு­கள், திட்­ட­மி­டு­தல் பிரி­வின் காவல்­துறை துணை கண்­கா­ணிப்­பா­ளர் லிம் ஜிம் காய் இந்த முயற்­சி­யைப் பாராட்­டி­னார்.

"பல 'மட்­டார்' எந்­தி­ரங்­களை இயக்­கு­வ­தோடு சட்ட ஒழுங்­கைக் கடைப்­பிடிக்க பல்வேறு இடங்­களில் அவற்­றைச் செயல்­ப­டுத்­த இந்தத் தளம் கூடு­தல் உத­வி­யாக இருக்­கும்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!