பெண் மரணம்; தீய செயல் காரணம் இல்லை

மலே­சி­யா­வைச் சேர்ந்த திரு­வாட்டி கூ யீ ஜூவின் உடல் கடந்த செவ்வாய்க்­கி­ழ­மை­ பாசிர் ரிஸில் உள்ள அப்பி அப்பி ஆற்­றில் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

செவ்­வாய்க்­கி­ழமை மாலை சுமார் ஏழரை மணிக்கு சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்கு அழைப்பு வந்­தது. காவல்­து­றைக்­கு ­மாலை 7.11 மணிக்கு அழைப்பு வந்­தி­ருக்­கிறது.

பெண்­ணின் உடல் கண்­டெ­டுக்­கப்­பட்ட இடத்­தி­லேயே அவர் மர­ண­ம­டைந்­ததை மருத்­துவ உதவி­யா­ளர்­கள் உறு­திப்­ப­டுத்­தி­ய­தா­கக் காவல்­து­றை­யினர் கூறி­னர். இச்­சம்­ப­வத்திற்குப் பின்னால் தீய செயல் ஏதும் இடம்­பெற்­றதாகத் தாங்­கள் சந்­தே­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர்கள் தெரிவித்தனர்.

உடல் கண்டெடுக்கப்பட்டதற்கு மூன்று நாள்­களுக்கு முன்­னர் திருவாட்டி கூ காணா­மற்­போ­னார். சை சீ தொழில்­து­றைப் பூங்­கா­விற்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்­தத்­தில் திருவாட்டி கூ கடைசி­யா­கக் காணப்­பட்­ட­தாக அவ­ரின் 46 வயது உற­வி­னர் திரு­வாட்டி ஹுவாங் யான்­யிங் சாவ்­பாவ் நாளி­த­ழி­டம் தெரி­வித்­தார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை ஆறு மணி­ய­ள­வில் வேலை­யி­லி­ருந்து புறப்­பட்ட பிறகு திரு­வாட்டி கூ பேருந்து நிறுத்­தத்­தில் இருந்­தி­ருக்­கி­றார். அவ­ரு­டன் இரு சக ஊழி­யர்­களும் அங்கு இருந்­த­னர்.

நிறுத்­தத்­திற்கு வந்த பேருந்தை நோக்­கித் திரு­வாட்டி கூ நடந்­து­செல்­வதை அவர்­கள் பார்த்­தி­ருக்­கின்­ற­னர். ஆனால் அந்­தப் பேருந்­தில் அவர் ஏறி­யதை சக ஊழி­யர்­களால் உறு­திப்­ப­டுத்­த­மு­டி­ய­வில்லை.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பின்­னி­ரவு இரண்டு மணி­ய­ள­வில் திரு­வாட்டி ஹுவாங் காவல்­து­றை­யிடம் புகார் கொடுத்­தார்.

பட்­டக் கல்­வியை முடித்த பிறகு திரு­வாட்டி கூ சிங்­கப்­பூ­ருக்கு வந்தி­ருக்­கி­றார். சென்ற ஆண்டு செப்­டம்­பர் மாதம் துணைப் பாட நிலை­யம் ஒன்­றில் சீனம் கற்­றுத்­ த­ரும் துணை ஆசி­ரி­ய­ரா­கச் சேர்ந்­து­கொண்­டார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!