கொவிட்-19 தொற்றியவர்களின் தனிமைக் காலம் குறைப்பு

கொவிட்-19 தொற்றியவர்களின் தனிமைக் காலம் குறைப்பு

1 mins read
66b2c719-e65c-4fc8-b0c7-fce1c28d72ca
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்கள் தனிமையில் இருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய தனிமைக் காலம் பத்து நாட்கள்.

இந்த புதிய விதிமுறை முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் பொருந்தும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், கிருமி தொற்றினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

ஒமிக்ரான் கிருமியின் தொற்று பாதிப்பு காலம் குறைவாக இருப்பதால், மாற்றம் செய்யப்பட்டதாக கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு தெரிவித்தது.

பாதிக்கப்பட்டவர்களிடம் வெளிப்படும் அறிகுறிகள் அடிப்படையில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

நோய் அபாயம் குறைவாக இருப்பவர்கள் வீட்டிலிருந்தபடியே பரிசோதனை செய்து கொண்டு, தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.

மூத்தவர்கள், கர்ப்பிணிகள், சிறு பிள்ளைகள், தொற்றின் அறிகுறிகள் அதிகமாக இருப்பவர்கள் அனைவரும் சுகாதார அமைச்சின் வீட்டிலிருந்தபடியே குணமடையும் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர். தேவை இருந்தால், அவர்கள் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்படலாம்.