'விடிஎல்' பயணச்சீட்டு விற்பனை: 50% வரம்பில் மாற்றமில்லை

'விடிஎல்' பயணச்சீட்டு விற்பனை: 50% வரம்பில் மாற்றமில்லை

1 mins read
c5d6c43a-6afc-48c0-af6c-3dc795a63967
சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் கடந்த நவம்பர் 29ஆம் தேதி எடுக்கப்பட்ட படம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைகளில் (விடிஎல்) பயணம் செய்வதற்கான பயணச்சீட்டு விற்பனையில் விதிக்கப்பட்டுள்ள 50 விழுக்காடு வரம்பில் மாற்றம் எதுவுமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) முதல் இந்த வரம்பு நடப்புக்கு வருவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஓமிக்ரான் பரவல் காரணமாக, கடந்த டிசம்பர் 23ஆம் தேதிமுதல் நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 20) வரை 'விடிஎல்' விமான, பேருந்து பயணச்சீட்டு விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

எனினும், ஏற்கெனவே பயணச்சீட்டுகளை வாங்கிவிட்டோர் 'விடிஎல்' பயண ஏற்பாட்டின்கீழ் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

ஓமிக்ரான் திரிபு பற்றி அதிகாரிகள் மேலும் தெரிந்துகொள்ள இந்த எல்லைக் கட்டுப்பாடு காலஅவகாசம் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், உள்ளூர், உலகளாவிய கொவிட்-19 நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்றவாறு நடைமுறைகளை தான் மாற்றியமைக்க இருப்பதாக அமைச்சு கூறியது.