ஓமிக்ரானின் தாக்கத்திற்கு வர்த்தகங்கள் தயாராக வேண்டும்

கி. ஜனார்த்­த­னன்

ஓமிக்­ரான் கொவிட்-19 கிரு­மித் தொற்று அலை மேலும் பலரைப் பாதிக்­கக்­கூ­டிய நிலை­யில் வர்த்­த­கங்­கள் தங்­க­ளது செயல்­பா­டு­களில் ஏற்­படும் இடை­யூ­று­க­ளைக் குறைக்க, அபா­யங்­க­ளைக் கையா­ளும் திட்­டங்­க­ளைத் தொடர்ந்து செயல்­ப­டுத்தி பாது­காப்பு நிர்­வாக விதி­மு­றை­க­ளைக் கடை­ப்பி­டிக்க வேண்­டும். கடந்த ஒரு வார­மாக ஓமிக்­ரான் தொற்­று­ எண்­ணிக்கை விரை­வாக அதி­க­ரித்­ததை அடுத்து, சுகா­தார அமைச்சு இந்த எச்­ச­ரிக்­கையை முதலாளி­க­ளுக்கு விடுத்­துள்­ளது.

ஊழியர்க­ளுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபா­யத்­தைச் சமா­ளிக்க, அவர்­கள் பிரிக்­கப்­பட்ட குழுக்­

க­ளா­கப் பணி­யாற்­று­வ­தற்கு ஏற்­பாடு செய்­வது உள்­ளிட்ட வர்த்­த­கத் தொடர்ச்சி உத்­தி­க­ளைச் செயல்­ப­டுத்த சுகா­தார அமைச்சு வர்த்­த­கங்­க­ளுக்கு, குறிப்­பாக அத்­தி­யா­வ­சிய சேவை­களை வழங்­கும் வர்த்­த­கங்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளது. வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வோ­ரில் பாதி பேர் வேலை­யி­டத்­திற்­குத் திரும்­ப­லாம் போன்ற தற்­போ­தைய பாது­காப்பு நிர்­வாக நட­

வ­டிக்­கை­களை வர்த்­த­கங்­கள் அணுக்­க­மாக பின்­பற்­ற­வேண்­டும் என்­றும் அமைச்சு கூறி­யது.

வேலை­யி­டத்­தில் பணி­யாற்­றும் ஊழி­யர்­கள் சமூக ஒன்­று­கூ­டல்­களில் பங்­கேற்­கா­மல் இருப்­ப­தை­யும் சாப்­பி­டு­வ­தற்­காக அவர்­கள் எடுக்­கும் இடை­வே­ளை­க­ளைத் தனித்­த­னியே எடுப்பதையும் முத­லா­ளி­கள் உறுதி செய்­ய­வேண்­டும்.

கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள் நிலைப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரும் நிதி­அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங், "இத­னால்­தான் தனி­ம­னிதப் பொறுப்பு மிக­வும் முக்­கி­யம். எல்­லோ­ரும் தங்­க­ளது பங்கை ஆற்றி, எங்கு சென்­றா­லும் பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளைக் கடைப்­பி­டித்து அடிக்­கடி சுய பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்," என்று நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தின்­போது கூறி­னார்.

"உங்­க­ளுக்கு உடல்­நிலை சரி­யில்­லா­மல் இருந்­தால், சாதா­ரண சளி­யைப் போன்ற அறி­கு­றி­கள் தென்­பட்­டா­லும்கூட கவ­ன­மின்றி செயல்­ப­டா­தீர்­கள். உரிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்து வீட்­டி­லி­ருந்தே வேலை செய்­யுங்­கள்," என்று அவர் கூறி­னார்.

"வீட்­டி­லி­ருந்து உங்­க­ளால் பணி­யாற்ற இய­லா­மல் வேலைக்கு செல்ல வேண்­டிய நிலை ஏற்­ப­டும்­போது அந்­நே­ரத்­தில் இலே­சான அறி­கு­றிகள் மட்­டும் இருந்து நீங்­கள் ஆரோக்­கி­ய­மாக இருப்­பதை உணர்ந்­தா­லும் ஏஆர்டி சோதனை எடுத்­துக்­கொண்டு உங்­க­ளால் பிற­ருக்­குக் கிருமி பர­வாது என்­பதை உறுதி செய்­வது சிறந்­தது," என்­றும் அவர் கூறி­னார்.

"ஒருவேளை, வேலை­யி­டத்­தில் ஒரு­வ­ருக்கு மட்­டும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டா­லும் பிற­ருக்கு அது பரவி வேலை­யி­ட­த்தில் பெரிய இடை­யூறை ஏற்­ப­டுத்­தி­வி­டாது," என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!