விடிஎல் பயணத் திட்டம்: பயணச் சீட்டுகள் விற்பனை, பரிசோதனை குறித்து விரிவான தகவல்கள்

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் அபா­யத்­தைக் குறைக்­கும் நோக்­கில் கடந்த நான்கு வாரங்­க­ளா­கச் சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­க­ளின் எண்­ணிக்­கைக் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்­த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை நேற்­று­டன் முடி­வ­டைந்­தது.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் 23ம் தேதி­யி­லி­ருந்து நேற்று முன்­தி­னம் வரை சிங்­கப்­பூ­ருக்கு வர தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணத் தடத் திட்­டத்­தின்­கீழ் (விடி­எல்) விமான, பேருந்­துப் பய­ணச் சீட்­டு­க­ளின் விற்­ப­னையை அர­சாங்­கம் நிறுத்­தி­யது.

கடந்த டிசம்­பர் மாதம் 23ஆம் தேதி­யி­லி­ருந்து நேற்று முன்­தி­னம் வரை விடி­எல் திட்­டத்­தின்­கீழ் பய­ணச் சீட்டு விற்­ப­னையை சிங்­கப்­பூர் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­யது. இது தொடர்­பாக நேற்று முதல்

என்­னென்ன மாற்­றங்­கள்

கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றன?

இது­தொ­டர்­பாக எந்த மாற்­ற­மும் இல்லை. புதிய விதி­மு­றை­கள் கடந்த டிசம்­பர் மாதத்­தி­லி­ருந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த நான்கு வாரங்­களில் விடி­எல் விமா­னப் பய­ணச் சீட்­டு­களை விற்க விமா­னச் சேவை

களுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

ஆனால் சிங்­கப்­பூ­ருக்­குள் வரும் விடி­எல் விமா­னப் பய­ணச் சீட்­டு­களை நேற்று முதல் மட்­டுமே விற்க முடி­யும். அதே­போல தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான நிலம் வழி பய­ணத் தடத் திட்­டத்­தின்­கீழ் பய­ணச் சீட்­டு­களை விற்க பேருந்­துச் சேவை நிறு­வ­னங்­க­ளான காஸ்வே லிங்க், டிரான்ஸ்­டார் டிரா­வல் ஆகி­ய­வற்­றுக்கு நேற்று முதல் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஏற்­பாடு கடந்த டிசம்­பர் மாதம் 23ஆம் தேதி­யி­லி­ருந்து நடப்­பில் இருந்து வரு­கிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி­யி­லி­ருந்து முன்­பை­விட குறைந்த அள­வி­லான விடி­எல் பய­ணச் சீட்­டு­களை விமா­னச் சேவை­களும் பேருந்து நிறு­வ­னங்­களும் விற்­பனை செய்து வரு­கின்­றன.

விடி­எல் பய­ணத்­தின்­கீழ் ஒவ்­வொரு நாளும் சிங்­கப்­பூ­ருக்கு வர அதி­க­பட்­சம் 5,000 பய­ணி­க­ளுக்கு விமா­னப் பய­ணச் சீட்­டு­கள் விற்­கப்­ப­ட­லாம். இதற்கு முன்பு அதி­க­பட்­சம் 10,000 பய­ணச் சீட்­டு­களை விற்க அனு­மதி வழங்­கப்­பட்­டது.

எந்­தெந்த நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூர் விடி­எல் ஒப்­பந்­தம் செய்­துள்­ளது?

விடி­எல் பய­ணத் திட்­டத்­தின்­கீழ் விமா­னம் மூலம் ஆஸ்­தி­ரே­லியா, புருணை, கம்­போ­டியா, கனடா, டென்­மார்க், ஃபிஜி, ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்­மனி, இந்­தியா, இந்­தோ­னீ­சியா, இத்­தாலி, மலே­சியா, மாலத் தீவு­கள், நெதர்­லாந்து, தென்­கொ­ரியா, ஸ்பெ­யின், இலங்கை, சுவீ­டன், சுவிட்­சர்­லாந்து, தாய்­லாந்து, துருக்கி, பிரிட்­டன், அமெ­ரிக்கா ஆகிய 24 நாடு­க­ளி­லி­ருந்து பய­ணி­கள் சிங்­கப்­பூ­ருக்கு வர­லாம்.

விடி­எல் நிலம் வழிப் பய­ணம் தொடர்­பாக மலே­சி­யா­வு­டன்

சிங்­கப்­பூர் தேவை­யான ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ளது.

விடி­எல் திட்­டத்­தின்­கீழ் பய­ணம் செய்­வோர் எத்­த­கைய பரி­சோ­த­னை­க­ளைச் செய்­து­கொள்ள

வேண்­டும்?

ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை தலை­தூக்­கு­வ­தற்கு முன்பு, விடி­எல் திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ருக்கு விமா­னம் மூலம் வந்த பய­ணி­கள் பய­ணத்­துக்கு முன்பு பிசி­ஆர் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. சிங்­கப்­பூர் வந்­த­டைந்­த­த­தும் அவர்­க­ளுக்கு மீண்­டும் பிசி­ஆர் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

விடி­எல் திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ருக்கு நிலம் வழி வந்த பய­ணி­கள் பய­ணத்­துக்கு முன்பு பிசி­ஆர் அல்­லது ஏஆர்டி பரி­சோ­தனை செய்­து­கொள்­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது. அவர்­கள் சிங்­கப்­பூர் வந்ததும் அவர்­க­ளுக்கு மீண்­டும் ஏஆர்டி பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

இரு பரி­சோ­த­னை­க­ளி­லும் கிரு­மித்­தொற்று இல்லை என்று உறுதி செய்­யப்­பட்­ட­தும் அவர்­கள் விரும்­பும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட அவர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. ஆனால் ஓமிக்­ரான் உல­கெங்­கும் வேக­மா­கப் பரவி வரும் நிலை­யில் பரி­சோ­தனை விதி­முறை­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

விடி­எல் திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூர் வரும் பய­ணி­கள் சிங்­கப்­பூர் வந்­த­தும் இரண்­டா­வது, நான்கு, ஐந்­தா­வது, ஆறா­வது நாள்­களில் சுய­மாக ஏஆர்டி பரி­சோ­தனை செய்து­கொள்ள வேண்­டும். மூன்­றா­வது, ஏழா­வது நாட்­களில் அதி­கா­ரி­க­ளின் மேற்­பார்­வை­யின்­கீழ் அவர்­க­ளுக்கு ஏஆர்டி பரி­சோ­தனை நடத்­தப்­படும்.

விடி­எல் திட்­டத்­தின்­கீழ் விமா­னம் மூலம் சிங்­கப்­பூர் வரும் பய­ணி­கள், பய­ணத்­துக்கு முன்பு கூடு­தல் விலை­யுள்ள பிசி­ஆர் பரி­சோ­த­னைக்­குப் பதி­லாக நிபு­ணர்­க­ளால் நடத்­தப்­படும் ஏஆர்டி பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்­ள­லாம்.

விடி­எல் திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ருக்கு வர முடி­யா­மல் போனால் வேறு எந்­தெந்த திட்­டங்­க­ளின்­கீழ் சிங்­கப்­பூ­ருக்கு வர முடி­யும்?

விடி­எல் திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ருக்கு வர முடி­யா­த­வர்­கள்,

அத்­திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ருக்கு வர விருப்­பம் இல்­லா­த­வர்­கள் நான்கு படி­நி­லை­க­ளைக் கொண்ட சுகா­தா­ரக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளின்­கீழ் சிங்­கப்­பூ­ருக்கு வர­லாம். இவ்­வாறு வரு­ப­வர்­கள்

கொவிட்-19க்கு எதி­ராக முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்­டும் என்­பது அவ­சி­ய­மில்லை.

கொவிட்-19 அபா­யம் ஆகக் குறை­வாக உள்ள நாடு­கள் பிரிவு 1ன் கீழும் கொவிட்-19 அபா­யம் ஆக அதி­கம் உள்ள நாடு­கள் பிரிவு 5ன் கீழும் இடம்­பெ­று­கின்­றன. மற்ற பிரி­வு­க­ளைக் காட்­டி­லும் பிரிவு 1ல் இடம்­பெ­றும் நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­களுக்­கான பரி­சோ­தனை விதி­முறை அவ்­வ­ளவு கடு­மை­யாக இருக்­காது. பிரி­வு­க­ளைப் பொறுத்து பரி­சோ­தனை விதி­மு­றை­யின் தீவி­ரம் அமை­யும். கூடு­தல் தக­வல்­

க­ளுக்கு https://safetravel.ica.gov.sg/shn-and-swab-summary எனும் இணை­யப்­பக்­கத்தை நாட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!