குழந்தைகள், மழலையருக்கான வழிகாட்டிகள்

குழந்தைகள், மழலையருக்கான வழிகாட்டிகள்

2 mins read
c009db4f-b178-4ab0-9932-bc6ef30a2418
ஈராண்டுகளுக்கு முன் 'பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் அட் செங்காங் ஈஸ்ட்'டில் ஆசிரியருடன் நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள். கோப்புப் படம் / ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பிள்­ளை­க­ளி­டையே அதி­கம் நட­மா­டா­மல் இருக்­கும் போக்கு வள­ரா­மல் இருக்­கப் பெற்­றோர் தங்­க­ளின் குழந்­தை­க­ளு­டன் தொலைக்­காட்சி பார்ப்­ப­தைத் தவிர்க்­க­வேண்­டும். ஒரு மணி­நே­ரத்­துக்­கும் மேலாக குழந்­தை­க­ளைக் கவ­னிக்­கா­மல் தனியாக விடக்கூடாது. பெரி­ய­வர்­க­ளான பிறகு பிள்­ளை­கள் ஆரோக்­கி­ய­மாக இருக்க இத்­த­கைய முயற்­சி­களை மேற்­கொள்­ள­வேண்­டும். சிங்­கப்­பூ­ரில் முதன்­மு­றை­யாக வெளி­யி­டப்­பட்ட கைக்­கு­ழந்­தை­கள், குழந்­தை­கள், மழ­லை­யர் ஆகி­யோ­ருக்­கான ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட வழி­காட்­டி­களில் இந்­தப் பரிந்­து­ரை­கள் இடம்­பெற்­றுள்­ளன.

இந்த வழி­காட்­டி­கள் 24 மணி­நே­ரத்­தில் மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­னவை. இவற்­றின்­கீழ் உடல்­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­கள், நட­மாட்­டம் அதி­கம் இல்­லா­மல் இருப்­பது, தூக்­கம், உண­வுப் பழக்க வழக்­கங்­கள் ஆகிய நான்கு அம்­சங்­க­ளின் அடிப்­ப­டை­யில் ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

ஐந்­தில் இரு கைக்­கு­ழந்­தை­கள் சரா­ச­ரி­யாக ஒரு நாளைக்கு ஒரு மணி­நே­ரம் தொலைக்­காட்சி பார்க்­கின்­ற­னர். ஐந்­தில் நான்கு குழந்­தை­கள் 30 நிமி­டங்­க­ளுக்­குத் தொலைக்­காட்சி பார்க்­கின்­ற­னர்.

"இவ்­விரு பிரி­வு­க­ளைச் சேர்ந்த குழந்­தை­கள் தொலைக்­காட்சி பார்ப்­பது நல்­ல­தன்று, அதற்­கான நேரத்தை முடிந்­த­வரை குறைக்­க­வேண்­டும்," என்று மெய்­நி­க­ராக நடை­பெற்ற வழி­காட்­டி­கள் வெளி­யீட்டு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் கூறி­னார். குழந்­தைப் பரு­வத்­தில் ஆரோக்­கி­ய­மாக இருப்­பது பிற்­கா­லத்­தில் உடல்­நலனி­லும் சுகா­தா­ரத்­தி­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­றும் டாக்­டர் கோ சுட்­டி­னார். "உடல் பரு­மான இருக்­கும் ஒரு குழந்தை பெரி­ய­வ­ரான பிற­கும் அவ்­வாறே இருக்க வாய்ப்­புண்டு என்று கூறப்­ப­டு­வது உண்­மை­தான்," என்று சொன்ன டாக்டர் கோ, பெரி­ய­வ­ரான பிற­கும் உடல் பரு­ம­னாக இருந்­தால் அது நீரி­ழிவு நோய் போன்­ற­வற்­றுக்கு வழி­வ­குக்­கும் என்­றும் எச்­ச­ரித்­தார்.

கைக்­கு­ழந்­தை­கள், குழந்­தை­கள், மழ­லை­யருக்கான வழி­காட்­டி­களை bit.ly/33U8Bz4 எனும் இணைய முக­வ­ரி­யில் காண­லாம்.