உடல்ரீதியான நடவடிக்கைகள் குறைந்தன

கொள்­ளை­நோய்ப் பர­வல் சூழல் கடு­மை­யாக இருந்த கால­த்­தில் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே உடற்­ப­யிற்சி உட்­பட உடல்­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை கணி­ச­மா­கக் குறைந்­த­தென சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் தெரி­வித்­துள்­ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் ஒன்­றாம் தேதி­வரை கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த 'சர்க்­கிட் பிரேக்­கர்' எனும் நோய்ப் பரவல் முறியடிப்புக் காலம் நடப்­பில் இருந்­தது. அந்த கால­கட்­டத்­தில் சரா­ச­ரி­யாக எடுத்­து­வைக்­கும் கால­டி­களின் எண்­ணிக்கை 8,050லிருந்து 4,320க்கு சரிந்­தது.

தினந்­தோ­றும் மக்­கள் உடற்­பயிற்­சிக்­காக செல­வி­டும் நேர­மும் சுமார் ஒன்­றரை மணி­நே­ரத்­தி­லி­ருந்து 59 நிமி­டங்­க­ளுக்குக் குறைந்­தது. அதி­கக் களைப்பை ஏற்­ப­டுத்­தாத உடற்­ப­யிற்சி செய்­வோர் முதல் உடலை வறுத்­திக்­கொள்­வோர் வரை இவர்களில் அடங்­கு­வர்.

'நேஷ­னல் ஸ்டெப்ஸ் சேலஞ்' எனும் மக்­கள் எடுத்­து­வைக்­கும் கால­டி­க­ளைக் கணக்­கிட்டு உடலை ஆரோக்­கி­ய­மாக வைத்­தி­ருப்­ப­தன் முக்­கி­யத்­து­வதை வலி­யு­றுத்­தும் திட்­டத்தை சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் ஆறா­வது முறை­யாக நடத்தி வரு­கிறது. கொவிட்-19 சூழ­லி­லும் உடலை ஆரோக்­கி­ய­மாக வைத்­துக்­கொள்ள மக்­களை ஊக்­கு­விப்பதற்கு இத்­திட்டத்­தில் சென்ற ஆண்டு புதிய சவா­ல் சேர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு மக்­கள் சரா­ச­ரி­யாக எடுத்­து­வைத்த கால­டி­க­ளின் எண்­ணிக்கை மீண்­டும் 8,000த்தைத் தொட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!