புத்தாக்கத்திற்கு வழிவிடும் இணக்கக் குறிப்பு

புத்தாக்கத்திற்கு வழிவிடும் இணக்கக் குறிப்பு

1 mins read
875c8b1a-c4e2-45cb-a2da-bbc881f2af5e
-

சிங்­கப்­பூர், இந்­தோ­னீ­சியா ஆகிய இரு நாடு­க­ளின் மத்­திய வங்­கி­கள் இணக்­கக் குறிப்பு ஒன்­றில் கையெழுத்­திட்­டுள்­ளன. இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­து­வ­துடன் புத்­தாக்­கம், நிதி சார்ந்த விதி­மு­றை­கள் போன்ற அம்­சங்­களில் இணைந்து செயல்படுவது இந்த இணக்­கக் குறிப்­பின் இலக்கு.

கட்­ட­ணங்­களில் புத்­தாக்க அம்­சங்­க­ளைச் சேர்ப்­பது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களில் இவ்­விரு நாடு­களும் இணைந்து செயல்­பட எண்­ணம் கொண்­டுள்­ளன. இந்த ஒப்பந்தம் அதை வெளிப்­ப­டுத்­து­வதாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம், இந்­தோ­னீ­சி­யா­வின் 'பேங்க் நெகாரா' மத்­திய வங்கி இரண்­டும் வெளியிட்ட கூட்டு அறிக்­கை­யில் குறிப்­பிட்­டன.

மத்­திய வங்­கி­கள் சம்­பந்­தப்­பட்ட விதி­மு­றை­க­ளின் தொடர்­பி­லும் அதி­கா­ர­பூர்­வ­மாக ஒத்­து­ழைக்க இரு நாடு­களும் எண்­ணம் கொண்­டுள்­ளன.

பயங்­க­ர­வா­தச் செயல்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் இதில் அடங்கும்.