கேல்டிகாட்டில் 15 உயர்தர சொகுசு பங்களாக்கள்

மீடி­ய­ாகார்ப் நிறு­வ­னத்­தின் பழைய வளா­க­மான 'கேல்­டி­காட் புரோட்­காஸ்ட் சென்­டர்' இருந்த கேல்­டி­காட் ஹில் பகு­தி­யில் பெரெ­னி­யல் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம் சொகுசு வீடு­க­ளைக் கட்­டத் திட்­ட­மிட்­டுள்­ளது. சொத்­துச் சந்தை, சுகா­தார நிறு­வ­ன­மான பெரெ­னி­யல் ஹோல்­டிங்ஸ், இப்­ப­கு­தி­யில் 15 'ஜிசிபி' எனும் உயர்­தர சொகுசு பங்­க­ளாக்­க­ளைக் கட்ட எண்­ணம் கொண்டுள்­ளது. இது, 99 ஆண்டு குத்­த­கைக் காலத்­திற்­குப் பெரிய அள­வில் எழுப்­பப்­படும் முதல் உயர்­தர சொகுசு பங்­க­ளாக்­கள் திட்­டமாகும்.

ஒவ்­வொரு சொகுசு பங்­க­ளாக்­கான நில­மும் 15,070லிருந்து 250,801 சதுர அடி பரப்­ப­ள­வைக் கொண்டி­ருக்­கும். அதிக பர­ப்ப­ள­வைக் கொண்ட நிலங்­கள் வருங்­கா­லத்­தில் மேலும் பிரிக்­கப்­ப­ட­லாம். அவ்வாறு பிரிக்­கப்­பட்ட ஒவ்­வொரு நிலத்­தி­லும் அதி­க­பட்­ச­மாக 26 பங்­க­ளாக்­கள் கட்­ட­ப்படலாம். அத்­தகைய நிலங்­கள் 'ஜிசிபி' பங்­களாக்­க­ளு­டன் சேர்த்து விற்­கப்­ப­ட­வேண்­டும் என்று நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் தெரி­வித்­தது.

தற்­போது இப்­ப­கு­திக்கு ஆண்ட்ரூ சாலை அல்­லது ஒலிவ் சாலை வழி­யா­கச் செல்­ல­லாம். இங்­குள்ள சாலை­களை விரி­வு­ப­டுத்த பெரெனி­யல் நிறுவனம் நிலப் போக்­கு­வரத்து ஆணை­யத்­து­டன் இணைந்து செயல்­படும்.

கேல்டிகாட் ஹில்லின் வடக்கு, தெற்­குப் பகு­தி­களை இணைக்­கும் புதிய பொதுப் பூங்கா ஒன்­றை­யும் அமைக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!