ஐந்து கிலோ ஹெராயின் பறிமுதல்; 100 பேர் கைது

ஐந்து கிலோ ஹெராயின் பறிமுதல்; 100 பேர் கைது

1 mins read
e6784ddf-ef03-486e-ba34-63340c60cfb2
பெட்டி, பெட்டியாக போதைப் பொருட்கள், பல வண்ண போதை மாத்திரைகள், புகை பிடிக்கும் குழல் போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். மொத்தம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 835,000 வெள்ளி. படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு -
multi-img1 of 3

மத்­திய போதை பொருள் ஒழிப்புப் பிரிவு அதி­கா­ரி­கள் தீவு முழு­வ­தும் நடத்­திய சோத­னை­யில் ஐந்து கிலோ­வுக்கு மேற்­பட்ட ஹெரா­யின் சிக்­கி­யது. இதில் சுமார் 100 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அதோடு, கஞ்சா, ஐஸ், எக்ஸ்­டசி போன்ற போதைப் பொருட்­களும் கைப்­பற்­றப்­பட்­டன.

பறி­மு­தல் செய்­யப்­பட்ட போதைப் பொருட்­க­ளின் மொத்த விலை $835,000க்கு மேல் என அதி­கா­ரிகள் தெரி­வித்­த­னர்.

கைப்­பற்­றப்­பட்ட போதைப் பொருட்­கள் சுமார் 3000 போதைப் புழங்­கி­கள் ஒரு வாரத்­துக்கு பயன்­ப­டுத்­தும் போதைப்

பொரு­ளுக்கு சமம் என மத்­திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு கூறி­யது.

கடந்த ஐந்து நாட்­க­ளாக, ஜூரோங் வெஸ்ட், பாசிர் ரிஸ், உட்­லண்ட்ஸ், தெலுக் பிளாங்கா, செர்க் கிட் ரோடு ஆகிய வட்­டா­ரங்­களில் அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­ட­னர்.