உரிமம் இல்லாமல் முகக்கவசங்களைத் தயாரித்த நிறுவனம்

உரிமம் இல்லாமல் முகக்கவசங்களைத் தயாரித்த நிறுவனம்

1 mins read
224135f4-5181-458e-9565-8734121f9fb1
-

தயா­ரிப்பு உரி­மம் பெறா­மல் 430,000க்கும் மேற்­பட்ட மூன்­ற­டுக்கு அறுவை சிகிச்­சை­யின்­போது பயன்­ப­டுத்­தப்­படும் முகக்­க­வ­சங்­க­ளைத் தயா­ரித்­த­தாக ஒரு நிறு­வ­னத்­தின் மீது குற்­றச்­சாட்டு கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

'ஃபர்ஸ்ட் என்-லாப்' எனும் அந்­நி­று­வ­னம் ஒரு­முறை பயன்­ப­டுத்­தக்­கூ­டிய மருத்­துவ பொருட்­களை தயா­ரித்து வரு­கிறது.

2020 அக்­டோ­ப­ருக்­கும் கடந்த ஆண்டு ஏப்­ர­லுக்­கும் இடையே அது 'என்-லாப்' என்று பெய­ரி­டப்­பட்ட முகக்­க­வங்­க­ளைத் தயா­ரித்­தது. சுகா­தா­ரப் பொருட்­கள் சட்­டத்­தின் கீழ் அந்­நி­று­வ­னம் தயா­ரித்த முகக்­க­வ­சங்­கள் 'கிளாஸ் ஏ' மருத்­துவ சாத­னங்­கள் என வகைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­விக்­கின்­றன. அதா­வது 'ஏ' முதல் 'டி' வரை வகைப்­ப­டுத்­தப்­பட்ட மருத்­துவ சாத­னங்­களில் 'ஏ' என்­பது குறை­வான ஆபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யவை என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தின் இணை­யத்­த­ளத்­தில் இடம்­பெற்­றுள்ள தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. அடுத்த மாதம் வழக்கு மீண்­டும் விசா­ர­ணைக்கு வரும்­போது 'ஃபர்ஸ்ட் என்-லாப்' குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்கொள்­ளும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.