குற்றச்சாட்டில் இருந்து பணிப்பெண் விடுவிப்பு

நான்கு மாதக் குழந்­தையை காயப்­ப­டுத்­தி­ய­தாக குற்­றம் சாட்டப்­பட்ட இந்­தோ­னீ­சிய பணிப்­பெண் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

தீர்ப்பு வழங்­கி­ய­போது தற்­போது 26 வய­தா­கும் நெந்­தி­யின் கண்­கள் கலங்­கின.

2019ல் பொங்­கோல் வீட்­டில் வேலை செய்­த­போது குழந்­தையை அவர் காயப்­ப­டுத்­தி­ய­தாக குற்­றம் சாட்­டப்­பட்­டது. வேறு இரண்டு குற்­றச்­சாட்­டு­களும் அவர் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

“மூன்று குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் நிரூ­பிக்­கும் நேரடி ஆதா­ரங்­கள் இல்லை. கண்­கா­ணிப்­புக் கேமரா இருந்­துள்­ளது. ஆனால் குற்­றம் புரிந்­த­தற்­கான ஆதா­ரம் அதில் இல்லை,” என்று தனது தீர்ப்­பில் ஜான் இங் தெரி­வித்­தி­ருந்­தார்.

குழந்­தை­கள், இளை­யர்­கள் சட்­டத்­தின் கீழ் 18 வய­துக்­குக் கீழ் உள்­ள­வர்­க­ளின் பெயர்­களை வெளி­யிட அனு­ம­தி­யில்லை என்ப தால் குழந்­தை­யின் பெயர் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

முந்­தைய விசா­ர­ணை­யில் 2019ஆம் ஆண்டில் நெந்தி வேலைக்கு அமர்த்­தப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு நடை­பெற்ற விசா­ர­ணை­யில் குழந்­தை­யின் தந்தை பல்­வேறு தக­வல்­களை வெளி­யிட்­டி­ருந்­தார்.

அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து வீட்டுக்­ குத் திரும்­பிக் கொண்­டி­ருந்­த­போது தன்னை அழைத்த மனைவி குழந்­தை­யின் காலில் சிராய்ப்­புக்காயம் இருந்­தது குறித்து தெரிவித்ததாகவும் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது குழந்தையின் காலில் சிராய்ப்பு காயம் இருந்ததாகவும் விசார ணையில் அவர் கூறி­யி­ருந்­தார். குழந்­தை­யின் பால் போத்­த­லில் உள்ள ரப்­பர் மூடி­யும் வழக்­கத்­திற்கு மாறாக விரிந்து கிடந்த தாகவும் அவர் சொன்­னார்.

இது குறித்து புகார் அளிக்கப் பட்டதால் வீட்டுக்கு வந்த காவல் துறையினர் நெந்தியை அழைத்துச் சென்றனர்.

ஆரம்பத்தில் நடந்த விசாரணையில் குழந்தையின் கால்களில் சிராய்ப்புக் காயம் ஏற்படுத்தியதை நெந்தி ஒப்புக் கொண்டார். குழந்தையின் தாயார் தினமும் திட்டியதால் அவர் மீது கொண்ட கோபத்தால் பால் போத்தலின் ரப்பர் மூடியில் உள்ள துளையை பெரிதாக்கிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு நடை பெற்ற நீதிமன்ற விசாரணையில் அந்தக் குற்றங்களை நெந்தி மறுத்து இருந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!