மோசடிவலையில் இருந்து வங்கி வாடிக்கையாளர்கள் தப்பிக்க...

முரசொலி

இன்­றைய உல­கப் பொரு­ளி­யலும் சமூக வாழ்வு முறையும் பணத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்­ட­தாக இருப்­பதால் நிதிச் சேவை­கள் ஒவ்­வொரு மனி­த­னின் அன்­றாட வாழ்­வில் தவிர்க்க இய­லா­த­தாக ஆகி­விட்­டன. வங்­கி­களும் நிதி நிறு­வ­னங்­களும் இத்­தகைய சேவை­களை வழங்கி வருகின்­றன.

நிதித் துறை வங்­கி­களை, நிறு­வ­னங்­களை, அமைப்­பு­களைக் கட்­டுப்­ப­டுத்­த­வும் வாடிக்­கை­யாளர்­களின் நலன்­களைப் பாது­காக்­கவும் ஒவ்­வொரு நாட்­டி­லும் அர­சாங்­கத்­திற்­குச் சொந்­த­மான மைய அமைப்பு ஒன்று செயல்­ப­டு­கிறது. அது நிதித் துறை நிறு­வ­னங்­களை எல்­லாம் ஒழுங்­கு­ப­டுத்தி வரு­கிறது.

உல­கம் எங்­கும் வங்­கி­கள், நிதி நிறு­வ­னங்­கள் எல்­லாம் முன்­பு­போல் இப்­போது இல்லை. அதே­போல் வாடிக்­கை­யா­ளர்­கள் சேவை­க­ளைப் பெறு­வதும் பல்­வேறு செயல்­க­ளைச் செய்­வ­தும் தலை­கீழாக மாறி­விட்­டன. இணை­யம் என்ற வசதி உலகுக்­குக் கிடைத்­த­து­தான் இதற்­கான கார­ணம்.

இப்­போ­தெல்­லாம் கைபேசி­யில் உள்ள ஒரு பொத்­தா­னைத் தொட்­டாலே போதும். செய்ய வேண்­டிய காரி­யம் கண்­மூடி கண் திறப்­ப­தற்­குள் முடிந்­து­விடு­கிறது. யாரும் வங்­கி­க­ளுக்கோ நிதி நிறு­வ­னங்­களுக்கோ நேர­டி­யா­கச் செல்ல வேண்­டிய தேவை அவ்­வ­ள­வாக இல்­லா­மல் போய்­விட்­டது.

பொது­வாக எல்­லாத் துறை­க­ளுமே மின்­னி­லக்­க­மாக மாறி­விட்­டன. அது­வும் நிதித் துறை­யில் அந்த வேகம் அதி­க­மாக இருக்­கிறது. இது அவ­சி­ய­மானதா­க­வும் ஆகி­விட்­டது. மின்­னி­லக்க வங்கி முறை என்­பது இன்­றைய வாழ்­வில் வலது கை போன்று தவிர்க்க இயலாததாக இருக்­கிறது.

அது­வும் உல­கின் நிதி மைய­மாக இருக்­கின்ற சிங்­கப்­பூர் மின்னிலக்க நிதித்துறையில் முன்­ன­ணி­யில் இருந்­தா­க­வேண்டிய கட்­டா­யம் உள்ளதால் இதை உணர்ந்து அர­சாங்­கம் நிதித்­துறையை பெரி­ய­ அ­ள­வில் மின்­னி­லக்கமய­மாக்கி உள்­ளது.

நிதித்­து­றை­யை­யும் அந்­தத் துறை வழங்­கும் சேவை­க­ளை­யும் பொறுத்­த­வரை நாணயம், நம்­பிக்கை இரண்டும் எப்­போ­துமே இரு தூண்­கள் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. அதோடு, வாடிக்­கை­யாள­ரின் பாது­காப்பும் மிக முக்­கி­ய­மா­னது.

மின்­னி­லக்க வங்கி முறை­யில் இவற்றை, முக்­கி­ய­மாக வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த கூடு­தல் முயற்­சி­கள் தேவைப்­ப­டு­கின்றன. கார­ணம், மின்­னி­லக்க வங்கி முறை­­யில் எந்த அளவுக்கு அதி­க­ வச­தி­கள் உண்டோ அந்த அளவுக்கு ஆபத்­து­களும் நிறைந்து இருக்­கின்­றன.

இணை­யத்­தைப் பயன்­ப­டுத்தி வங்­கி­கள், நிதி நிறு­வ­னங்­களைப் போலவே செயல்­பட்டு மோசடி செய்து வாடிக்­கை­யா­ளர்­களை ஏமாற்றுவ­தற்கு மின்­னி­லக்க வங்கி முறை­யில் மோச­டி­ப் பேர்­வ­ழி­களுக்கு வச­தி­கள் அதி­கம் என்பதால் கர­ணம் தப்­பி­னால் மர­ணம் என்ற எச்­ச­ரிக்­கை­யு­டன்­தான் எப்­போ­துமே செயல்­பட வேண்டி இருக்­கிறது.

வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அறவே சந்­தே­கம் ஏற்­படாத வகை­யில் நம்­பிக்­கைக்­கு­ரிய வங்­கி­க­ளின், நிதி அமைப்­பு­க­ளின் பெயர்­களைப் பயன்­ப­டுத்தி மிக­வும் தந்­தி­ர­மா­கத் தில்லுமுல்லுக்காரர்கள் செயல்­படு­கி­றார்­கள். வங்கி வாடிக்­கை­யா­ளர்­களைக் குறி­வைத்து குறுஞ்­செய்­தி­கள் மூலம் ஏமாற்­று­வ­தற்­கான முயற்­சி­கள் கூடி வரு­கின்­றன.

இத்­த­கைய முயற்­சி­கள் நாளுக்கு நாள் புதுப்­புது வடி­வில் இடம்­பெ­று­கின்­றன. மோச­டி­கள் இப்­போது அதி­க­ரித்­து­விட்­ட­தாக சிங்­கப்­பூர் காவல்­து­றை­யும் உச்ச நீதி­மன்­ற­மும் மிக முக்­கி­ய­மான எச்­ச­ரிக்­கை­களை விடுத்து இருக்­கின்­றன.

இவற்றை எல்­லாம் கருத்­தில்­கொண்டு வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பாது­காப்பை ஒன்­றுக்கு இருமுறை வலு­வாக உறு­திப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் சிங்­கப்­பூரின் மைய வங்­கி­யான சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் சிங்­கப்­பூர் வங்­கி­கள் சங்­க­மும் பல­த­ரப்­பட்ட கூடு­தல் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை நடப்­புக்கு கொண்டு வரு­கின்­றன.

கட்­டுப்­பா­டு­களை உட­ன­டி­யாகக் கடு­மை­யாக்கு­வதற்குப் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தும் நீண்­ட­கா­லப் போக்­கில் மோச­டி­களைத் தடுப்­ப­தும் அத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளின் நோக்­கம்.

ஆகை­யால் அடுத்த ஓரிரு வாரங்­களில் குறுஞ்­செய்­தி­கள், மின்­னஞ்­சல் தொடர்­பில் வாடிக்­கை­யாளர்­கள் சில மாற்­றங்­களை எதிர்­பார்க்­க­லாம். இவை எல்­லாம் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தும் என்று திட்­ட­வட்­ட­மாக நம்­பு­வ­தற்கு இடம் இருக்­கிறது.

மோசடி மிரட்­டல்­கள் இணை­யத்­தில் கூடி வரு­வதால் அதைச் சமா­ளிக்க போது­மான அள­வுக்கு பாது­காப்பு ஏற்­பா­டு­கள் இருப்­பதை உறு­திப்­ப­டுத்த மிக முக்­கிய நிதி நிறு­வ­னங்­க­ளின் மோசடி, தில்லு­முல்லு கண்­கா­ணிப்பு ஏற்­பா­டு­களை இந்த ஆணை­யம் தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கிறது.

இது ஒருபுறம் இருக்க, மோசடி­களைக் கண்­டு­பி­டித்து அவற்றைத் தடுப்­ப­தற்கு மிகப் பாது­காப்­பான அம்­சங்­களை சிங்­கப்­பூ­ரில் செயல்­படக்­கூ­டிய அனைத்து நிதி நிறு­வ­னங்­களும் நடை­மு­றைப்­படுத்­தும் என்­றும் எதிர்­பார்க்­க­லாம்.

இவை எல்­லாம் வாடிக்­கை­யா­ளர்­க­ளைப் பாது­காப்­ப­தற்­காக சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­கள் எடுக்­கப் போகும் நட­வ­டிக்­கை­கள். அதேநேரத்தில் வாடிக்கை யாளர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டியது கட்டாயமானது.

மின்­னி­லக்க வங்கி முறை­யைப் பொறுத்­த­வரை, தங்­க­ளுக்குத்தான் பொறுப்­பு­கள் அதிகம் என்­பதை ஒவ்­வொரு வாடிக்­கை­யா­ள­ரும் மறந்­து­வி­டக் கூடாது.

மின்­னி­லக்க வங்கி முறைக்கு இணை­யம் வழி புதுப்­புது பாணி­களில் தொடர்ந்து மோசடி மிரட்­டல்­கள் வரத்­தான் செய்­யும். வாடிக்­கை­யா­ளர்­கள் விழிப்­பு­டன் இருந்­தா­லொ­ழிய அத்­த­கைய மோச­டி­களில் இருந்து தப்­பு­வது என்­பது இய­லாத ஒன்று.

இணைய உல­கில் எப்­படி செயல்­ப­டு­வது என்­பதை ஒவ்­வொ­ரு­வ­ரும் கூடு­மானவரை சந்­தே­கம் இல்­லாமல் தெரிந்து வைத்­துக்­கொள்ள வேண்­டும்.

கைபேசி வழி­யாக, மின்­னி­லக்க ரீதி­யில் பணத்தை அனுப்­பு­வது, பணத்­தைக் கொடுப்­பது, பெறு­வது போன்ற காரி­யங்­கள் எல்­லாம் மிக­வும் வச­தி­யா­ன­வை­தான். ஆனால் அவற்றை மிக­வும் பாது­காப்­புடன் செய்­தால்­தான் விரும்­பிய பலன் ஏற்­படும். இல்லை எனில் ஏமாந்­து­போக வேண்­டிய நிலை­தான் ஏற்­படும். வங்­கி­களும் நிதி நிறு­வ­னங்­களும் தங்­கள் பொறுப்­பு­க­ளைச் செவ்­வனே நிறை­வேற்­றி­னால் மட்­டும் போதாது.

மோச­டி­ப் பேர்­வ­ழி­க­ளின் இலக்கு அப்பாவி வாடிக்­கை­யா­ளர்­கள்­தான் என்­ப­தால் இதில் வாடிக்­கை­யா­ளர்­களுக்­குத்­தான் பொறுப்பு அதி­கம்.

அவர்­கள் முன்­பின் தெரி­யா­த­வர்­களை நம்பி சொந்தத் தக­வல்­களை ஒரு­போ­தும் கொடுக்­கக் கூடாது. மின்­னி­லக்க வங்கி முறை­யில் விழித்துக் கொண்­டே இருந்தால்தான் எப்போதுமே தப்பித்துக் கொண்டே வாழ முடி­யும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!