புதிதாக 3,155 பேருக்கு கிருமித் தொற்று; வார விகிதம் கூடியது

சிங்­கப்­பூ­ரில் வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 3,155 பேருக்குத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அமைச்சு கூறி­யது.

வாராந்­திர தொற்று விகி­தம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை 2.7 ஆகக்­ கூ­டி­யது.

முந்­திய வாரத்­தை­விட கடந்த வாரம் தொற்று எப்­படி இருந்­தது என்­ப­தைக் காட்­டும் இந்த அளவு, வியா­ழக்­கி­ழமை 2.17 ஆக இருந்­தது என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

புதி­தாக கிருமி தொற்­றி­யோரில் 1,616 பேருக்கு பிசி­ஆர் பரி­சோ­தனை மூலம் தொற்று கண்டு­பி­டிக்­கப்­பட்­டது.

அவர்­களில் 1,278 பேர் உள்­ளூர்­வா­சி­கள்; 338 பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள்.

ஏஆர்டி பரி­சோ­தனை மூலம் 1,539 பேருக்­குத் தொற்று தெரி­ய­வந்­தது. அவர்­களில் 1,516 பேர் உள்­ளூர்­வா­சி­கள்; 23 பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள்.

ஒரு­வர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் அமைச்சு கூறி­யது. மொத்த மரண எண்­ணிக்கை 846 ஆகி­யது.

சிங்­கப்­பூ­ரில் கொரோனா தொற்­றி­யோ­ரின் மொத்த எண்­ணிக்கை வெள்­ளிக்­கி­ழமை நில­வரப்­படி 307,813. மருத்­து­வ­ம­னை­களில் 360 பேர் சிகிச்சை பெறு­கி­றார்­கள். 13 பேர் தீவிர சிகிச்சை பிரி­வில் உள்ளனர்.

ஏஆர்டி பரி­சோ­தனை மூலம் தொற்று இருப்­பது தெரி­ய­வந்­தது பற்றி வெள்­ளிக்­கி­ழமை முதன்­மு­த­லாக அமைச்சு தெரி­வித்­தது.

சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் அன்று நடந்த செய்­தி­யா­ளர் மாநாட்­டில் அன்­றாட கிரு­மித்­தொற்று பற்­றிய தக­வல்­களில் இடம்­பெ­றக்­கூ­டிய மாற்­றம் பற்றி குறிப்­பிட்டு இருந்­தார்.

அதன்­படி ஓமிக்­ரான் தொற்றுக்கும் இதர கொவிட்-19 தொற்­று­க­ளுக்கும் இடை­யில் வேறு ப­டுத்­திக் காட்­டப்­படும் நிலை இருக்­காது என்று அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட்டுக்­கொள்ள தகுதி பெற்­ற­வர்­களில் 91 விழுக்காட்டினர் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுள்­ள­னர். 54% மக்­கள் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டு உள்­ள­தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!